பக்கம் எண் :

களவுப் படலம்1157

 புனங்காவ லின்முன் புகுத்திய வன்னை புறக்கணித்து
 மனங்காவ லின்மையி னின்றுவைத் தாளுயிர் வாழ்வகையென்
 சினங்காவல் கொண்டவை வேலருந் தேர்வன தேர்கிலரால்
 கனங்காவல் கொண்ட கடிவரைச் சாரலங் கார்ப்பொழிற்கே.

(இ - ள்.) தினைப்புனத்தினைக் காத்தற் றொழிலின் கண்ணே (நம்மை) முன்னர்ச் செலுத்திய அன்னையாரும் அக்காவலைப் புறக்கணித்து மனக்காவலுடன் கூடிய இல்லின்றன்மையளாக இருக்க இன்று வைத்தனள். ஆதலான் நம்முயிர் (உடலோடு கூடி) வாழும் வகை யாங்ஙனம். சீற்றந் தோன்றாமற் பொறிகளையடக்கிய கூர்மை பொருந்திய வேற்படையை யுடையாரும் மேகங்களாற் சூழப்பெற்ற விளக்கமுள்ள மலையின் பக்கத்தேயுள்ள கரியசோலையினிடத்து ஆராய்வனவற்றை ஆராய்ந்திலர் நாமென் செய்வேமென்றன ளென்க.

(வி - ம்.) இன்மையினின்று வைத்தாள் - இல்லின்றன்மையளாயிருக்க வைத்தாள். கனங்காவல் கொண்ட கடிவரை - மேகங்கள் சூழப் பெற்ற விளக்கமுற்ற மலை. சீற்ற மெழாமற் பொறியடக்கியார் என்பாள். சினங்காவல் கொண்ட வேலர் என்றாள். தலைவரைக்கூடாது உயிர்வாழ்தல் அரிதென்பாள் "உயிர் வாழ்வகை யென்" என்று கூறினாள். மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல்.

(444)

அலரிற் காத்தமை மலர்முகத் தலைவி
உயிரோரன்ன வொண்டொடிக் குரைத்தல்

அஃதாவது தமர்தன்னைக் காதலித்தவிடத்துத் தன்னுளத்தினோ டுரைத்த தலைவி பசிய தொடியினையுடைய தோழியே ! வண்டலயர்கின்ற பொழிலிடத்தும், தினைக்கொல்லையின் பக்கலிலும் சுனையிடத்தும் நீங்காமலொரு தேர் திரிதருகின்றது. இங்ஙனந் திரிதருதற்குக் காரணம் என்ன வென்று ஊரவர் சொல்ல அன்னையென்னைப் புறத்திற் போகலை யென்றாளெனக் கூறாநிற்றல்.

 ஆவா விதுவென்ன காரணம் வண்ட லயர்பொழிலும்
 காவா வளர்தினைப் பாங்கும் படியுங்கண் ணார்சுனையும்
 ஓவா துழலு மொருதே ருளதென வூருரைப்பப்
 பாவாய் புறத்தினிப் போகலென் றாளன்னை பைந்தொடியே.

(இ - ள்.) பசிய வளையலையணிந்த தோழியே ! வண்டலாட்டினைச் செய்கின்ற சோலையின் கண்ணும் (நாம்) காத்தலினான வளர்தலைச் செய்கின்றதனைக் கொல்லையின் பக்கலிலும் (நாம்) மூழ்குகின்ற இடமகன்ற சுனையின் பக்கத்தும் ஒரு தேர் ஒழிவில்லாமற் சுற்றுகின்றதென்று ஊரவர் சொல்ல ஐயோ, இது என்ன காரணமோ, யானறியேன் அன்னை யானவள் பதுமையை ஒத்தவளே இனிப் புறத்தே செல்லற்க வென்றன ளென்றா ளென்க.

(வி - ம்.) பழி மிகுதலால் அன்னை தன்னைக் காத்தமை தலைவி யுரைத்தல். உயிரோரன்ன - உயிரை யொத்த. படியும் - நீராடுகின்ற.