| தேர் - தலைவன்தேர். மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த இளிவரல். பயன் : இற்செறிவுறுத்தி வரைவு கடாதல். (445) தோற்றப் பொலிவாற் காத்தமை கிளத்தல் அஃதாவது அன்னை தன்னைக் காத்தமையைத் தோழிக்குரைத்த தலைவி தன்மாட்டு மங்கைப் பருவத்திற்குரிய இலக்கணங் காணப்படுதலாற் காத்தமை கூறாநிற்றல். | | சுனைக்கடி நீலந் துரப்பன கண்கடுன் னார்துளங்கும் | | | முனைக்கரிக்கோடு முரிப்பன கொங்கை முழுநிறவேய் | | | தனைக்கழைக் கோலைத் தடிவன தோள்கள் கவன்றினிநீ | | | மனைக்கய லேக லெனவுருத் தாளன்னை வார்கொடியே. |
(இ - ள்.) நீண்ட கொடியினை யொத்த தோழியே ! அன்னையானவள் கண்கள் சுனையின்கண்ணுள்ள நீலமலரினைத் தம் வனப்பால் நீக்குவன. பகைவர் நடுங்குதற் கேதுவான யானையின் கூரிய கொம்பினைக் கொங்கைகள் தம் வனப்பான் முரிப்பன. தோள்கள் மிக்க பசிய நிறத்தினையுடைய மூங்கிலையும் கரும்பினையும் தம் வனப்பால் தடிவனவாகும். ஆதலால் வருத்தமுற்று இனி நீ இல்லின் புறத்தே செல்லற்க வென்று கோபித்தனளென்றா ளென்க. (வி - ம்.) மங்கைப் பருவத்திற் றலைவிக்குளவாம் பொலிவினை நோக்கி யன்னை தடுத்தமை கூறல் துறை. கழைக்கோல் - கழையாகிய கோல் : கரும்பு; மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : இற்செறி வுறுத்தி வரைவு கடாதல். (446) வருத்தஞ் சுட்டி இருத்திய துரைத்தல் அஃதாவது தோற்றப் பொலிவு கண்டு அன்னை காத்தமை கிளந்த தலைவி ஆராய்ந்த இழையணிந்த தோழியே ! தோளும் கண்ணும் எழிலோடிய மேனியும் வளைச்சோர்வு நோயினிலையைக் காணத்தக்க முகமும் நின்னையுறுதற்குக் காரணமென்னை, விளையாட இனிச்செல்லாதே என அன்னை கூறினள் எனக் கூறாநிற்றல். | | வாடிய தோளு மலிபுனற் கண்ணுநன் மாமையெழில் | | | ஓடிய மேனியு மொள்வளைச் சோர்வு முயிர்ப்பெழவுள் | | | நீடிய நோயி னிலைகாண் முகமு நினக்குறலென் | | | ஆடிய சோலைசெல் லாதியென் றாளஞ்ஞை யாயிழையே. |
(இ - ள்.) ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களையணிந்த தோழியே ! தாயானவள் வாட்டமுற்ற தோள்களும், நீர்நிறைந்த கண்களும் மாமை நிறத்தினையுடைய வனப்பு நீங்கப்பெற்ற மேனியும், ஒள்ளிய வளைகளின் சோர்தலும், பெருமூச்சுளவாக உள்ளே பொருந்திய நோயினது நிலைமை காணுதற் கேதுவாகிய முகமு நினக்குற்றதற்குக் காரணமென்னை ஆதலான் விளையாடற் பொருட்டுச் சோலையின்கட் செல்லாதிருப்பாயாக வென்றன ளென்க. |