| மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த இளிவரல். பயன் : இற்செறிவுறுத்து வரைவு கடாதல். (447) மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தல் அஃதாவது வருத்தஞ்சுட்டி இருத்தியதுரைத்த தலைவி மூங்கிலினை யொத்த தோளினை யுடையாளே ! நீ தேவரியல்பினையோ, துயில் வாயல்லையென வினாவிய அன்னைக்குத் தாயே வேலர்க் கணங்கு கொண்டாரைத் துயில்சாருமோ வென்று வெளிப்படையாகச் சொல்லக் கருதி அங்ஙனஞ் சொல்லினமை யொருவரும் மதியாரெனக் கருதி மெல்ல என் நெஞ்சினுக்கு மாத்திரம் கூறினேனெனக் கூறாநிற்றல். | | இமையா ரியல்பினை யோதுயில் வாயலை யென்னுமன்னைக் | | | கமையா லியன்றன தோளாய்வை வேலர்க் கணங்குகொண்டார் | | | தமையா வதுந்துயில் சாருங்கொ லோவெனச் சாற்றமுன்னி | | | நமையார் மதிப்ப ரெனப்பைய நெஞ்சி னவின்றனனே. |
(இ - ள்.) மூங்கிலினால் இயன்றா லொத்த தோளினையுடைய தோழியே ! (தாய் என்னை நோக்கி) நீ தேவரியல்பினையோ துயில்வாயல்லை என்று கேட்டதாயினுக்கு (தாயே) வேற்படையை யுடையார்க்குத் துன்பங்கொண்டவரைச் சிறிதும் துயில் வந்து பொருந்துமோவென்று (வெளிப்படையாகச்) சொல்லக்கருதி (அங்ஙனங் கூறின்) நம்மை யொருவரும் மதியாரெனக் கருதி மெல்லப் பிறர்க்குப் புலனாகா வண்ணம் நெஞ்சினுக்குச் சொற்றன னென்றா ளென்க. (வி - ம்.) முருகனெனவும் தலைவனெனவும் பொருள்பட "வேலர்க் கணங்கு கொண்டார்" என்றனள். துறை தலைவன் மனையில் வந்தகப்பட்டு வருந்திய வழி அன்னை யறிந்து விடுவளென்று கலங்கி அவன் நீங்கியபோது நீங்கிய அருமறையென்க. மறை - களவு. உயிர்த்தல் - வெளியிடல். மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (448) காப்புச்சிறை மிக்க கையறு கிளவி அஃதாவது மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்த வழித்தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை வெளியிட்ட தலைவி குருகீர் ! தாயுங் காவல் கொண்டனள். தாங்கவல்ல நீயும் அயர்த்தாயென்று சரதம் தமக்கின்மையாகச் செய்தவர் தமக்குரைமின்க ளெனக் கூறாநிற்றல். | | தாயுந் தளரத் தனிக்காவல் கொண்டன டாங்கவல்ல | | | நீயுந் தளர நெடிதயர்த் தாயென்று நீர்ப்பரப்பில் | | | பாயுந் தகட்டு வராலினந் தேரும்பைங் காற்குருகீர் | | | வாயுந் தமக்கின்மை செய்தார்க் குரைத்தல் வலிமின்களே. |
(இ - ள்.) நீரின் பரப்பினிடத்துப் பாய்கின்ற தகட்டு வடிவான வராற் கூட்டங்களை (இரையாக) ஆராய்கின்ற பசிய காலினையுடைய குருகினங்களே ! அன்னையும் (தலைவி) வருந்த ஒப்பற்ற காவலை மேற் |