| கொண்டனள். (அத்தலைவியை ஊறுற்ற காலத்து) தாங்குதல் வல்ல நீயும் தளரும் வண்ணம் நீண்டகாலம் மறந்தனை யென்று சரதத்தினைத் தமக்கில்லாமையாகச் செய்த தலைவற்குச் சொல்லக் கருதுங்க ளென்றா ளென்க. (வி - ம்.) வாயுந் தமக்கின்மை செய்தார் - உண்மையும் பேசும் வாயில்லாமற் செய்துகொண்டார்க் கெனினுமமையும். வாய் - உண்மை. மெய்ப்பாடு : அழுகை. இவற்றைத் தலைமகன் கேட்பின் வரைவானாம். தலைவிதானே யாற்றுதல் பயன். (449) உயிராக் காலத்துத் தன்னு ளுயிர்த்தல் அஃதாவது காவன் மிகுதியாற் செயலற்று வருத்தங்கூறிய தலைவி தலைவனைக் கூடியநாளு மொன்றேயாகும். அவ்வொருநாட் புணர்ந்த மைக்குப் பலநாள் துன்பமிகச் செய்த தலைவனை யாம் நோவவேண்டுமே யல்லாமல் பெண்ணே ! நீ வருந்தற்குக் காரணமென்னை யென உசாவாத மனிதர்களை கங்குலும் ஊரும் உடையதென நோவ வழக்கில்லையெனக் கூறாநிற்றல். | | முயங்கிய நாளுமொன் றேயின்ன னாளு முதிரவிட்ட | | | தயங்கிய தார்வரை மார்பனை நோவதல் லாற்றையலாய் | | | உயங்கிய தென்னென் றுசாவல்செய் யாரை யுடையதென | | | மயங்கிருட் கங்குலை யூரினை நோவ வழக்கில்லையே. |
(இ - ள்.) (யான் தலைவரைப் பொழிற்கண்) கூடிய நாளும் ஒன்றேயாகும். (அங்ஙனம் ஒருநாண் முயங்கிய காரணத்தான்) துன்பினை ஒவ்வொரு நாளிடத்தும் முதிரச்செய்த விளங்கிய மாலையை யணிந்த வரைபோன்ற மார்பினையுடைய தலைவனை (யாம்) இங்ஙனம் செய்தற்குக் காரணமென்னை யென்று கருதி வருந்துவதன்றி தலைவியே நீ வருந்துவதற்குக் காரணம் என்னையென்று வினாவாத மக்களைக் கங்குலும் ஊரும் உடையதென்று அவற்றை நோவ வழக்கில்லை யென்றா ளென்க. (வி - ம்.) தையலாய் என்றது ஈண்டு விரித்தது தோழியை யன்று தலைவியை யென்க. முன்னர் மார்பனென ஒருமையாற் கூறிப் பின்னர் செய்யாரெனப் பன்மையாற் கூறல் பொருந்தா தாகலான் யானுயங்கியதை உசாவல் செய்யாத மனிதர்களை கங்குலும் ஊரும் உடைய தென்று அவ்விரண்டனையும் நோவவென்க. துறைவெளி விடாக் காலத்துத் தலைவி தன்னுள்ளே வெளிவிடல் என்பது. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (450) உயிராக் காலத்துத் தோழிக் குயிர்த்தல் அஃதாவது உயிராக்காலத்துத் தன்னுள் வெளியிட்ட தலைவி தோழியே ! தலைவன் நெஞ்சினை நோயின்கண் நிறுத்துவாரானாலும் அவர் பிரிதல் செய்யார் யான் ஆய்க்கு அஞ்சுவேனெனினும் அன்பரிடத்தினின்று அன்பிற் குறைதல் எனக்கெஞ்ஞான்றும் இல்லையெனக் கூறாநிற்றல். |