| செவிலி யறிந்தமை கவலையி னுரைத்தல் அஃதாவது ஆயக்கூட்டத்தார் அண்ணலை யறிந்தமை கூறிய தலைவி தோழி ! தலைவர் பல நாளிடையிட்டு ஒருநாள் வரினும் நாம் அவரைக் கூடாமையான் வருந்தும் கடனல்லது வேறில்லை யென்க. அவ்வொரு நாளில் அவர் வேலொடு வந்தமை நோக்கி முருகனோ, அரசனோ வென்று கேட்டனள் எனக் கூறாநிற்றல். | | பலநா ளிடையிட் டொருநா ளடுப்பினும் பார்த்திபரைக் | | | கலவா தழுங்குங் கடனல தில்லைக் கனையிருள்வாய் | | | வலம்வா ரயிலொடு வந்தமை நோக்கி வரைமுருகோ | | | அலதோ ரிறைமக னோவென் றுசாவின ளன்னைமின்னே. |
(இ - ள்.) (நம்மைக் கூடுவதற்குத் தலைவர்) பல நாளிடையிட்டு ஒருநாள் வந்து கூடினும் (அவ்வொரு நாளும்) அவரைக் கூடாது வருந்துங் கடனல்லது வேறில்லை செறிந்த இருளினிடத்து வலப்பக்கத்தே நீண்ட வேற்படையுடன் வந்தமையைக் கண்டு தோழியே ! அன்னையானவள் இம்மலையின்கண் எழுந்தருளிய முருகனோ, அன்றியொரு அரச குமரனோவென்று விசாரித்தனள் என்றாளென்க. (வி - ம்.) கலவாமல் வருந்துதற்கேது தாயறிவா ளென்னுமச்சமேயாம். அவ்வொருநாளும் நாம் அவர் மாட்டிரக்கங்கொண்டுகூட வேண்டிய தின்றியமையாதென்பாள் "கலவாதழுங்குங் கடனலதில்லை" யென்றனள். துறை : தலைவியின் கூற்று. இனித் தலைவரைக் கலவாமல் வருந்துங் கடன்றானிருக்கின்ற தெனினுமாம். மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (456) செவிலி களவு தெரிந்தமை கூறல் அஃதாவது செவிலி யறிந்தமை கவலையினுரைத்த தலைவி கொடி யோராகிய தலைவர் கொடுமையை நினைத்து உள்ளங்கையில் முகத்தை இறக்கிக் கண்ணீர் ஒழுக்காநின்றேன் என் பக்கலில் அன்னை வந்து இன்னல் யாவதென்று கேட்க நீங்காத சோம்பலினோடு நின் வார்த்தையென வெண்ணி உள்ள தன்மையை வெளியிட்டேன் எனக் கூறா நிற்றல். | | கொடியோர் கொடுமையை யேற்றிக் குடங்கை முகனிகுத்து | | | வடியோ டெதிர்விழி வாரநின் றேன்மருங் கன்னைவந்து | | | பிடியோ வெனுநடை யாயின்னல் யாவ தெனப்பெயரா | | | மடியோடு நின்னுரை யென்றுள்ள வாய்மை வழங்கினனே. |
(இ - ள்.) தோழியே ! (நின்னிற் பிரியேன் பிரியினுயிர் வாழேனெனக் கூறிய) கொடியோராகிய (தலைவர்) நம்மாட்டுச் செய்த கொடுங்குணங்களை நினைத்து அகங்கையின் கண்ணே முகத்தை இறக்கி மாவடு எதிர்த்து நிற்கின்ற விழியினின்று கண்ணீரொழுக, நின்ற என் பக்கலில் அன்னையானவள் வந்து நடையாற் பெண் யானையினை யொத்த நடையினையுடையாய் (நினக்குளதாந்) துன்பம் யாவதென்று வினாவா |