| நிற்க என்னினின்றும் நீங்காத மடியினோடு நின்னுடைய வாய்மொழி யென்று கருதி உள்ளனவாகிய உண்மைத் தன்மையினை வெளியிட்டன னெனக் கூறின னென்றா ளென்க. (வி - ம்.) ஏற்றி - நினைத்து. இதனை "ஏற்றந் நினைவும் துணிவு மாகும்" என்னும் தொல். சொல். உரி. சூத்திரத்தானறிக. பெயரா மடி - நீங்காத சோம்பல். குடங்கை - அகங்கை. இகுத்தி - இறக்கி. செவிலி மகள் தோழியாதலின் மொழி யொற்றுமையால் நீ யென்று கருதின னென்பாள்" நின்னுரை யென்றுள்ள வாய்மை வழங்கினன் என்றாள். "மடியோடும் வழங்கின னெனவே வழங்குதற்கு மடியு மேதுவாயிற்றென்பாள்" பெயராமடி யென்றனள். மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (457) அலரெழச் செவிலி யறிந்தமை கூறல் அஃதாவது செவிலி களவு தெரிந்தமை கூறிய தலைவி தோழியே ! அயலிலாட்டியர் ஏதிலன் காதலி வம்மென்று உரையாடி நக நாணியான் பெயராநிற்க. அன்னை நன்கறிந்து நங்குடிக்குப் பழிமொழியாயினவே யென்று முகம்வாடின ளெனக் கூறாநிற்றல். | | வல்லுரை வாயின ரேதிலன் காதலி வம்மெனவே | | | எல்லுரை யாடி நகுதலு நாணிமற் றியான்பெயர | | | நல்லுரை யாடு நறுங்குழ லேயன்னை நன்றறிந்து | | | புல்லுரை யாயின வேயென்று வாடினள் பூமுகமே. |
(இ - ள்.) நல்லனவாய இனிய சொற்களைக் கூறுகின்ற நறுமணம் நாறு கூந்தலினையுடைய தோழியே ! பழிச்சொற்களைக் கூறுகின்ற அயலிலாட்டியர் அயலான் காதலியே வருவாயாக வென்று பகற்காலத்துச் சொல்லுதல் செய்து நகாநிற்க (நான்) நாணுதல் செய்து பெயராநிற்க இதனைத் தாயானவள் பெரிது மறிந்து நங்குடிக்குப் பழிமொழியாயினவே யென்று பொலிவுற்ற முகம் வாடினள் ஆதலான் அன்னை அறிந்துளா ளென்றன ளென்க. (வி - ம்.) வல்லுரை வாயினர் - பழிகூறும் அயலிலாட்டியர். ஏதிலன் - அயலான். எல் - பகல். ஆடல் - சொல்லல். நன்று - பெரிது. புல்லுரை - புல்லியமொழி. பூ - பொலிவு. ஆதலால் அறிந்துளாள் என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (458) பொழுதும் ஆறும் புரைவதன்மையின் அழிவுதலை வந்த சிந்தையிற் கிளத்தல் அஃதாவது அலரெழச் செவிலி யறிந்தமை கூறியதலைவி தோழியே அழகு கெட்டு முன் கையிலுள்ள வளையல் நீங்க விழைவை யுடையை யாய்க் கொடிய வாற்றின்கண் வரல் நல்லதன்ரென்று கூறுவாயெனக் கூறாநிற்றல். | | என்றூழ் தணந்தவண் டாமரை போலெழி றீர்ந்துமுன்கைக் | | | கன்றூழ் கொளவிட்ட காதலர்க் கோது கனையிருள்வாய்க் |
|