| | கொன்றூம் பெனக்கழை மீமிசை பின்னுங் கொடுநெறிநன் | | | றன்றூ டுறவெய்யை யாய்வரு மாறென் றலர்முலையே. |
(இ - ள்.) பரந்த தனங்களையுடைய தோழியே ! வெங்கதிர் மண்டிலம் நீங்க, (வாட்டமுறுகின்ற) வளவிய தாமரைபோல அழகு கெட்டு முன் கையின் கண்ணுள்ள வளையல்கள் உகாநிற்க. (நம்மை) நீங்கிய காதலையுடைய தலைவர்க்குச் செறிந்த இருளினிடத்து அச்சத்தைத் தரத்தக்க துவாரம் என்று சொல்லும் வண்ணம் மூங்கில்கள் பின்னுதலுற்றிருக்கும் கொடிய நெறியின் கண்ணே பொருந்த விழைவினை யுடையையாய் வருதல் நல்லதன்றென்று சொல்வாயாக வென்றன ளென்க. (வி - ம்.) இருள்வாய் கொடு நெறியில் விழைவுடையாய் வருதல் நன்றன்றென்று காதலர்க்கோதென்க. என்றூழ் - சூரியன். ஊழ் கொளல் - உகுதல். கொன் - அச்சம். தூம்பு - இரு பக்கலிலும் மூங்கில்கள் பின்னியிருத்தலுளவாகிய மார்க்கம். வெய்யை - விருப்பமுடையையாய். கனை - செறிவு, உற - பொருந்த. ஓது - சொல்லுவாய். இருள்வாய் என்பதனாற் பொழுது புலப்படும். ஆறு - வழி. புரைவது - ஒப்பது. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (459) ஐயச்செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழி கொடுத்தல் அஃதாவது பொழுதும் ஆறும் புரைவதன்மையி னழிவு தலைவந்த சிந்தையொடு கிளந்த தலைவியை அன்னாய் ! தலைவி அயலே இரவினூடு சென்று வந்தாள் எனமாறு கொள்ளற்க. கனவானது வருத்த வெளியே சென்று வருகின்றன ளல்லாமல் வேறில்லை. இரவின்கண் விளக்கின்றிச் செல்லாள் பகலிற் றுணையின்றி செல்வதற் கஞ்சுவாள் எனக் கூறாநிற்றல். | | வணங்கிடை நள்ளிர வூடய லேகிவந் தாளெனநீ | | | பிணங்கலை வாழியன் னாய்கன வானது பேதுறுத்த | | | வணங்குகின் றாள்சுட ரில்லா விடத்தசை யாள்பகலும் | | | இணங்குறு நற்றுணை யின்றேற் புலம்புக் கினைகுவளே. |
(இ - ள்.) அன்னையே ! வணங்கிய இடையினையுடைய தலைவி நடுவிரவின்கண் வீட்டயற் பக்கலில் போய் வந்தனளென நீ பிணங்குதலை யுடையாய் கனவானது அவளை வருத்த (வெளியிற் செல்வதும் உள்வருவதுமாக) வருந்துகின்றனள். விளக்கில்லாவிடத்து அவள் தங்காள் பகற்காலத்தின் கண்ணும் பொருந்துகின்ற நல்ல துணையில்லையாயின் தனிமைக்கு வருந்துவளென்றா ளென்க. (வி - ம்.) பிணங்கல் - மாறுகொளல். பேதுறுத்த - வருத்த. சுடர் - விளக்கு. அணங்கு - வருத்தம். அசைதல் - தங்குதல். புலம்பு - தனிமை. துறை - இரவிற் றாயறியா வண்ணம் தலைவனைக்கூடி வருமாற்றை யறிந்த தாய் கொண்ட வையத்தினைத் தோழியறிந்து கனவு வருத்தப் பக்கலிற் சென்று வருகின்றாளன்றி கூட்டங் காரணமாகச் |