| சென்று வருகின்றாளல்லள் என ஐயத்தை நீக்குதல் உலகத்துச் சிலர் கனவுகாணின் எழுந்தோடி மீளலியல்பாகலின் "கனவானது பேதுறுத்த அணங்குகின்றாள்" எனக் கூறினாரென்க. தாயை நோக்கித் தோழி கூற்று. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (460) இகுளை தலைவனை இயற்பழித் துரைத்தல் அஃதாவது ஐயச்செய்கை தாய்க்கெதிர் மறுத்தும் மாற்றி மெய் யறிவுறுத்த தோழி நம்மால் விழையப்படுகின்ற தன்மையுடையார் நட்டேமாகிய நாம் துன்பத்திற் செல்ல நன்மையைக் கருதாதவர் நாம் சொல்லியும் கண்ணோட்ட மிலராயுள்ளனர் எனக் கூறாநிற்றல். | | மறுகணி வீதி விழாவயர் நீல வரைப்பதியின் | | | அறுகணி வார்சடை வீராட்ட காசனை யண்மிலர்போல் | | | உறுகணி னாளுநட் டேஞ்செல நன்மையுன் னாருரைத்தும் | | | பெறுகணில் லாரம்ம வோவென்னர் நாம்விழை பெற்றியரே. |
(இ - ள்.) நாம் விரும்பத்தக்க தன்மையுடைய தலைவர் மறுகுக்கழகாக வீதிகடோறும் விழவினைச் செய்கின்ற தணிகைப் பதியின்கண் அறுகம் புல்லினையணிந்த நீண்ட சடையினையுடைய வீராட்டகாசத்தின் கண்ணுள்ள இறைவனைப் பொருந்தாரைப்போல நாம் துன்பத்தின் கண்ணே நாடோறும் (அவர் மாட்டு) நட்பினைக்கொண்ட (நாம்) செல்லா நிற்க (நமது நன்மையினை) நாம் பலமுறை வற்புறுத்திச் சொல்லியும் நினையாராயினர். ஐயகோ ஈதென்ன ஆச்சரியம். கண்ணோட்டஞ் சிறிது மிலராவர். ஆதலான் எத்தன்மையரோ யாமறிந்தில மென்றா ளென்க. (வி - ம்.) அண்முதல் - அணுகல். நட்டேமாகிய நமக்குக்கேடு சூழ்வர் என்பதை விளக்கிய "உறுகணினாளு நட்டேஞ்செல நன்மையுன்னார்" என்றனரென்க. பெறுகணிலார் - மக்களிடத்திற் செய்யப் பெற்ற கண்ணோட்டமில்லாதவர். என்னர் - எத்தன்மையர். அம்மவியப்பிடைச்சொல். ஓ : அசைநிலை. உரைத்தல் - ஈண்டுவரைந்து கோடச் சொற்றல். மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (461) தலைவி தலைவனை இயற்பட மொழிதல் அஃதாவது இகுளை தலைவனியல்பினைப் பழித்துரைக்கக் கேட்ட தலைவி தோழியே ! துன்பமாகிய கடலுள் யான் மூழ்கத் துறந்தங்கிருப்பவரே எனதரிய உயிர்காவற் கிருப்பவர் எனக் கூறாநிற்றல். | | உருப்பவிர் தீக்கதிர் காலும் பரிதி யுலகமெல்லாம் | | | விருப்பவிர் மேகம் விளைப்பதன் றோவிழு மக்கடலுள் | | | அருப்பவிர் பூண்முலை யாய்விழுந் தியானழுந் தத்துறந்தங் | | | கிருப்பவ ரேயென தாருயிர் காவற் கிருப்பவரே. |
(இ - ள்.) அரும்பினைப் போன்று விளங்குகின்ற அணிகலன்களை யணிந்த முலையினையுடையாய் ! வெப்பத்தினை வெளியிட்டு விளங்குகின்ற |