பக்கம் எண் :

களவுப் படலம்1169

(இ - ள்.) பூவின் நிறத்தினையுடைய உடலோடு கூடிய நல்ல தலைவியே ! அங்காடி வீதிகள் யாவும் துயின்றில, தெய்வதங்கட்கிட்ட பந்தரோடு கூடிய மன்றங்களிலே பெரிய ஒலிகள் நீங்கில. நகர்காப்பாளர் ஒழிவில்லாமற் சுற்றித் திரிகின்றனர். அழலின் நிறத்தினையுடைய வேற்படையினையுடைய (நஞ்) செல்வர் (தாம் வருஞ்) செவ்வியை யறிந்தன்றிப் பொருந்தார் ஆதலான் இங்ஙனம் வாராமைக்கா துன்பத்தினை மேற்கொள்வது என்றன ளென்க.

(வி - ம்.) ஆவணம் - அங்காடி வீதி. ஆகுபெயர். செல்லல் - துன்பம். காவணம் - பந்தல். மன்றம் - பொதியில். பதம் - காலம். அரவம் - ஒலி. மெய்ப்பாடு : பிறன்கட் டோன்றிய அழுகை. பயன் : ஆற்றுவித்தல்.

(464)

கூறிய வாயிற்கு வேறிது கிளத்தல்

அஃதாவது வருந்தொழிற் கருமைவாயில் கூறக்கேட்ட தலைவி தோழியே ! காமநோய் காலைக்கட்டோன்றி பகற்கட்போது கொண்டு மாலைக்கண் மலர்வதாயின் மயக்கமாகிய நோயான் உளவாகிய இடையூறுகள் கடற்கணுளவாகிய அலையொலி போல விடியுமளவுந் கலக்கு மென்றால் உய்தியாங்ஙன மெனக் கூறாநிற்றல்.

 காலை யரும்பிப் பகலினெல் லாங்கடிப் போதுகொண்டு
 மாலை யலர்வதென் றான்மம்மர் நோய்மலி யூறுமன்னோ
 வேலை யலையின் விடியு மளவும் விரவுமென்றால்
 ஓலை யணிந்த செவியாய் நமக்கினி யுய்தியென்னே.

(இ - ள்.) ஓலையென்னுங் காதணியை யணிந்த செவியினையுடைய தோழியே ! (காமநோய்) காலைக்கண் அரும்புதல் செய்து பகற்கால மெல்லாம் வாசனையுடைய மலரும் பருவத்தரும்பாகி மாலைக்காலத்து மலருதல் செய்யும் ஆனால் மயக்கங் காரணமாக உளதாம் நோய்கள் கடற்கண் உளதாம் அலைபோல விடியுமளவும் விரவினால் ஐயோ நாம் உய்தல் எத்தன்மையதா மெனக் கூறினாளென்க.

(வி - ம்.) மலியூறு - ஆவண வீதி துயிலாமை முதலிய இடையூறுகள். அன்னோ : இரக்கக் குறிப்பு. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல்.

(465)

இரவு வருவானை இகுளை விலக்கல்

அஃதாவது கூறியவாயிற்கு வேறிது கிளந்த தலைவி காவன் மிகுதியாற் கண்டுயிலாமை யறிந்த தலைவனை நீ இவண் வருதற்கு இடையூறுகள் பலவுள்ளன. அவ்விடையூறுகள் எனக் குறுதலில்லை யென்று நீ உரைப்பினும் யாம் அதனைத்தேறும் தன்மையில்லேம். நீ வருங்காலஞ் சிறிது தவறுமாயின் தலைவி துன்பந்தணியும் பருவத்தளல்லளாகின்றாள். பகற்காலத் திவளைப் பெறுவாய் இரவுக் காலத்திவண் வாராயெனக் கூறாநிற்றல்.

 ஊறும் பலவுள வேயுற லின்மை யுரைப்பினும்யாம்
 தேறும் படியிலஞ் சேர்பதஞ் சற்றே திரும்பினஞர்