| தாற் சிறப்பெய்தியும் இராப்பொழுதின்கண் நீல மலர்கள் அவள் கண்களுக் குவமையாக நின் முகமாகிய வெண்கதிர் மண்டிலத்தின் ஒளியால் வனப்புறுவதாயினும் உள்ளமானது மிகவும் வருந்தி அந்தப் புல்லுவதனுக் குடம்பட்டிலது ஆதலான் இவ்விரு பொழுதின்கண்ணும். இங்கே வாரற்கவெனக் கூறினாளென்க. (வி - ம்.) எனவே பகலிலும் இரவினும் துயில்கொள்ளாது தலைவி துன்புறினும் அவளுள்ளமானது புல்லுதற்கியைந்தில தென்க. வெங்கெதிர் மண்டிலம் தோன்றிய காலத்துத் தாமரை விரியுமாறுபோல விழிகளும் நித்திரையின்றிக் குவியாது விரிந்து நிற்றலால் "அல்லிற் கமலமிவள் விழிநேர விரவியிற் சீர்த்தென்" றனர். வெண்கதிர் மண்டிலத்தினொளியால் நீலமலர்கள் கவினுறுவதுபோல நின்முகமாகிய வெண்கதிர் மண்டிலத்தால் கண்கள் கவினுறுவதாயினும் அவளுள்ளமானது புல்லுதலுக்குப் பொருந்திய தன்றென்பாள் "அல்லிற்குவளை நிகர்ப்ப நினதா னனமதியின் வில்லிற் கவினுவ தேனு முளமோ மிக விடைந்தப் புல்லுக்கியைந்தில தென்றாள்" என்றனர். இதனாற் தலைவியின் கண்கள் இருபொழுதினும் துயிலாமைக்கேதுவும் பெற்றாம். இதனாற் றலைவனே நின்னாலுளவாகிய காமநோயான் தலைவியானவள் இருபோதும் நித்திரையின்றி இருப்பினும் அவளுளம் புணர்ச்சிக்குடம்பட்டிலது என்பது கருத்தாகக் கொள்க. உளம் புணர்ச்சிக்குடம்படாமைக்குக் காரணம் வரைந்து கொள்ளாது களவொழுக்கத் தான் உளவாம் அலரினை நோக்கி யென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : பகற் குறியும் இரவுக் குறியும் விலக்கி வரைவு கடாதல். (469) காமமிக லுரைத்து வரைவு கடாதல் அஃதாவது பகலினு மிரவினும் அகலிவணென்ற தோழி மன்னனே ! கண்ணிமையானது இடையி லாடாநிற்க நினதுருவினைப் பொருந்திக் களித்தலை விலக்குவதென்று கண்ணி மெலிகின்ற தலைவியின் ஆவி நிலை பெறுதற்கிரவினும் பகலினும் வந்தடுத்து நீங்கின் அடுத்தொழிதலாகிய அது உறுதி பயிற்றுவதின்றா மெனக் கூறாநிற்றல். | | காவிக் கருங்க ணிமையிடை யாடநின் காமருரு | | | மேவிக் களித்தல் விலக்குவ தென்று மெலியுமிவள் | | | ஆவிக் கிரவிற் பகலிற்சற் றேவந் தடுத்தொழியிற் | | | பாவிக் குறுதி பயிற்றுவ தின்றது பார்மன்னனே. |
(இ - ள்.) உலகினைக் காத்தல் செய்யுந் தலைவனே, காவி மலர் போன்ற மையெழுதப்பெற்ற கண்ணிமைகள் இடையே ஆடுதலான் (அவ்விடையாடலானது) நின்னுடைய கண்டார்க்கு விருப்பம் வருகின்ற வடிவத்தினை (விழித்த வண்ணம் பார்த்தலை) விலக்குவதாமென்று கருதி மெலிகின்ற தலைவியின் உயிரினுக்கு நீ இராக்காலத்தும் பகற்காலத்தும் சிறிது அடுத்து நீங்கின் அங்ஙனமடுத்தலாகிய அது பாவியாகிய தலைவிக்கு உறுதி பயப்பதில்லை. ஆதலான் வரைந்து கொள்ளென்றன ளென்க. (வி - ம்.) அது ஆவிக்கு உறுதி பயப்பதின்றென வியைக்க. பாவிக்கு - பாவியாகிய தலைவிக்கு ஆதலால் வரைந்து கொள்ளென்பது |