| குறிப்பெச்சம். துறை : காம மிக லுரைத்தலென்பது. "மெலியு மிவளென்பதனால்" அறிக. அது - அடுத்தொழிதல். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆசையுரைத்து வரைவு கடாதல். (470) வன்சொற் கிளந்து வரைவு கடாதல் அஃதாவது காமமிக வுரைத்து வரைவு கடாய தோழி அரசனே ! களவானே இத்தலைவி நலத்தை யுண்டு இவளுயிரை வருத்தும் நெறியல்லாமல் முறைப்படி இவணலத்தை யுண்டுயிரைக் காக்கும் பேரறிவு நினக்கரிதாயிருந்ததெனக் கூறாநிற்றல். | | மறையா லிவணல முண்டுயிர் வாட்டும் வழியலது | | | முறையா லிவணல முண்டுயிர் காக்கு முதுக்குறைவு | | | நிறையா லுயருமன் னாவரி தாங்கொ னிரைநிரையாய்த் | | | துறையா ரருவிவெண் டூசெனத் தோற்றுநின் றொல்வரைக்கே. |
(இ - ள்.) நெஞ்சைப் புலன்களின் வழிச் செல்லாம னிறுத்தலான் உயர்ச்சி பொருந்திய அரையனே ! இத்தலைவியி னலத்தைக் களவானுண்டு இவளுயிரினை வருத்தும் வழியினையல்லாமல் (உளநூலின்) முறையானே இவணலத்தை யுண்ணுதல் செய்திவளுயிரைக் காவல் செய்யும் தொழில் நினக்கரியதாகும். வரிசை வரிசையாகத் துறைகடோறும் அருவித்திரள் வெள்ளிய அறுவையினைப் போலத் தோன்றா நிற்கும் பழமை பொருந்திய வரையினிடத்து இவளை வரைந்து கொண்டு வருத்தா திருப்பாயாக வென்றன ளென்க. (வி - ம்.) மறை - களவு. முதுக்குறை - பேரறிவு. தூசு - அறுவை. ஆதலால் எங்களை வரைந்து கொண்டு வருத்தாதிருப்பாயென்பது குறிப்பெச்சம். "இவணல முண்டுயிர்காக்கு முதுக்குறைவு நிறையாலுயருமன்னா" என்பது வன்சொற் கூறல். மெய்ப்பாடு : அழுகை. பயன் : வன்சொற் கூறி வரைவு கடாதல். (471) பழிப்புரை கிளந்து வரைவு கடாதல் அஃதாவது வன்சொற் கூறித் தலைவன் மாட்டு வரைவு கடாய தோழி வேற்படையையுடைய தலைவனே ! கடவுளிடத்து நெஞ்சு பொருந்தாதாரைப் போலப் பொய்யுரைத்தலின் வல்லமையுடையாய். தன்னையடைந்தார் இடும்பையை நீக்காய் : வருத்தலைக் கற்றுள்ளனை. உண்மையோதுங் கருத்து மில்லையா யுள்ளனை. இஃதென்ன நடிப்போ யாமறிந்தில மெனக் கூறாநிற்றல். | | அல்லார் களத்தனை வீராட்ட காசத் தடிகளைநெஞ் | | | சொல்லா தவரின்வல் லாய்பொய் யுரைப்பவுற் றாரிடும்பை | | | கல்லா யலைத்தலைக் கற்றாய் மெய்யோதுங் கருத்தணுவும் | | | இல்லா யிதுவென்ன நாடக மேந்திலை வேலவனே. |
(இ - ள்.) கையிற்றாங்கிய இலைத்தொழிலமைந்த வேற்படையையுடைய தலைவனே, (நஞ்சத்தினை உணவாகக் கோடலான்) இருணிறைந்த கண்டத்தை யுடையானை வீராட்டகாசத்தின் கண்ணுள்ள |