பக்கம் எண் :

1174தணிகைப் புராணம்

சுவாமிகளை நெஞ்சினிடத்துப் பொருந்தாதவர்கள் போலப் பொய் கூறலின் வல்லமையுடையாய் (உன்னைச் சரணென்று) பொருந்தினவர் துன்பினைக் களைந்தெறியாய் (அவர்களை) வருத்துதலைக் கற்றனை : உண்மையைப் பிறர்க்குச் சொல்லுகின்ற எண்ணஞ் சிறிதுமில்லையாயிருக்கின்றனை. இஃதென்ன நடிப்போ யாம் அறிந்திலம் ஆதலின் இவைகளையெல்லாம் நீத்து வரைந்து கொள்வா யென்றன ளென்க.

(வி - ம்.) நெஞ்சொல்லாதவர் - மனம் பொருந்தாதவர், பொருந்தல் - கடவுளிடத்துச் சேறல். கல்லாய் - களையாய். அலைத்தல் - வருத்தல். மெய்ப்பாடு : அழுகை. பயன் : பழிப்புரை கூறி வரைவு கடாதல்.

(472)

தெளிவிடை விலக்கி வரைவு கடாதல்

அஃதாவது பழிப்புரை கிளந்து வரைவு கடாய தோழி அண்ணலே ! உலகில் அலர் தூற்றுந் தன்மையுடையன; வளைகள் போற்றுந் திறத்தனவல்ல; பசப்பு நீங்குந் திறத்ததன்று. ஆதலானித் தலைவிக் காற்றுந்திறம் எவ்வாறு கூடுமெனக் கூறாநிற்றல்.

 ஆற்றுந் திறமிவட் கெங்ஙன மெய்து மலருலகில்
 தூற்றுந் திறத்த சுடர்த்திரி நெய்யிற் சுடுபுனற்கண்
 போற்றுந் திறத்தன வல்லமுன் கையிற் பொருத்துவளை
 பாற்றுந் திறத்ததன் றானுத லூரும் பசப்பண்ணலே.

(இ - ள்.) அண்ணலே விளக்கின் கண்ணுள்ள திரியானது (வெம்மை பொருந்தும்) நெய்யைச் சுட்டுமாறு போலக் கண்கள் (காம வெப்பத்தாற்) சுடுதலுற்ற புனலைத் தூற்றுந் திறத்தன. முன் கையினிடத்துச் செறிந்துள்ள வளைகள் (கழலாமற்) பாதுகாக்குந் தன்மை யுடையனவல்ல. (நின் பிரிவால்) நுதலின் கண்ணூரும் பசப்பும் நீங்குந்தன் மையுடையதன்று உலகின்கண் அலரையாற்றுந் தன்மை இத்தலைவிக் கெங்ஙனம் பொருந்தும் ஆதலால் இவளையுடனே வரைந்து கொண்டு செல்லென்றன ளென்க.

(வி - ம்.) களவியல் பத்தாவது முன்னிலையாக்கல் என்னும் சூத்திரத்துள் நச்சினார்க்கினியர் தெளிவகப்படுத்த லென்பது நின்னிற் பிரியேன் பிரியின் ஆற்றேன், அறனல்லது செய்தேன் ஆவேன் எனத் தலைவி மனம் தேற்றம் படக்கூறல் என வரைந்தனர். ஆதலால் தலைவன் தெளிவகப்படுத்துங்கால் அதனைத் தோழி விலக்கி வரைவு கடாதல். மெய்ப்பாடு : அழுகை. பயன் : தெளிவகப்படுத்தலை விலக்கி வரைவு கடாதல்.

(473)

அருளின்மை தகாதென வரைவு கடாதல்

அஃதாவது தெளிவிடை விலக்கி வரைவு கடாய தோழி அறிவின் தெளிவையுடையவனே ! மணஞ்செய்யுந் தன்மையினிற்பதல்லது நீ மணத்தல் செய்யாது நீங்குந்தன்மையாலுயிர் நீங்குந் தலைவியின்பால் அன்பில்லையாயின் வள்ளிக்கொடியின் முதலரிந்ததை யொக்குமெனக் கூறாநிற்றல்.