| | மணக்கும் பரிசினல் லாலுயிர் வாழ்க்கை மணப்பதின்றித் | | | தணக்கும் பரிசினில் லாத்தடங் கண்ணிதன் பானினக்கே | | | நிணக்கும் பரிசில்லை யேற்றகு மோநிலை சோர்ந்தவள்ளி | | | உணக்கும் பரிசின் முதலரிந் தாலொக்கு மொள்ளியனே. |
(இ - ள்.) அறிவினால் ஒள்ளிய தன்மையையுடைய தலைவனே ! (நீ தலைவியை) மணந்துகொள்ளுந் தன்மையால் (அவளுயிர் உடலோடு கூடி நிற்பதன்றி) மணஞ் செய்து கொள்ளுந்தன்மையின்றி நீங்குந் தன்மையால் நிலைபெறாத பெருமை பொருந்திய கண்ணினையுடைய தலைவியிடத்து நினக்கு அன்பு கொண்டொழுகுந்தன்மை இன்றாயின் (உடலோடுகூட) உயிர் நிற்றல் தகுதியாகுமோ ஆகாது. (எங்ஙன மெனின்) தன்னியல்பில் நிற்கும் வள்ளிக் கொடியினை உணக்கஞ் செய்யுந்தன்மைக்காக அடியை யரிந்ததை யொப்பாகு மென்றன ளென்க. (வி - ம்.) உயிர் வாழ்க்கை மணப்பதின்றித் தணக்கும் பரிசினில்லாத் தடங்கண்ணி யென்க. அவளிடத்துப் பசையாந்தன்மை இல்லையாயின் விடும்வண்ணம் வள்ளிக்கொடியின் முதலரிந்ததை யொக்கும் ஆதலான் இது தகுதியாகுமோ வென்க. ஆகையால் விரைவில் வரைந்து கொள்வாய் என்பது குறிப்பெச்சம். நிணத்தல் - பசைதல். அஃதாவது அன்புடைமை. தணத்தல் - நீங்குதல். உணக்கல் - வாடல். முதல் - வேர். ஒண்மை - அறிவின் தெளிவு. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அருளின்மை தகாதென வரைவு கடாதல். (474) கையறு தோழி கண்ணீர் துடைத்தல் அஃதாவது அருளின்மை கூறி வரைவு கடாய தோழி மணிகளானாய அணிகலன்களை யணிந்த முலையினையுடைய தலைவியே ! எனதுயிரும் ஒளியும்வாட என்னுயிர் போன்ற நினதுயிரும் வாட மிக்க புனலில் நனைதலான் (நின் கையின் கண்) நின்னுயிர் போன்ற மரப்பாவையும் ஒளிகெட நின் கண்கள் நிலைபெற்ற பெருமூச்செறிய அழுதற்குக் காரண மென்னையெனக் கூறாநிற்றல். | | என்னுயிர் வாட வெனதொளி வாட வெனக்குயிராம் | | | நின்னுயிர் வாட நினதொளி வாட நெடும்புனலுள் | | | தன்னுயிர்ப் பாவையுஞ் சாம்ப நினது தடங்கணந்தோ | | | மன்னுயிர்ப் போடக் கலுழ்வதென் னேமணிப் பூண்முலையே. |
(இ - ள்.) மணிகளானாய அணிகலன்கள் பூணப்பெற்ற முலையினை யுடைய தலைவியே (நீ வருந்துங் காரணமாக) எனதுயிர் வாடா நிற்க என தொளியும் வாடா நிற்க என்னுயிரினை ஒத்த நினதுயிரும் வாட நின தொளியும் வாடாநிற்க மிகுதியாக ஒழுகுகின்ற புனலினால் (தன் கையின் கண்ணுள்ள) மரப்பாவையும் வாடப் பெருமை பொருந்திய கண்கள் நிலைபெற்ற பெருமூச்சானது ஓடாநிற்க அழுதற்குக் காரணமென்னை? ஆகையான் இவளை வந்து வரைந்துகொண்டு செல்லென்றன ளென்க. (வி - ம்.) அழுத கண்ணீருள் விளையாடும் பாவை மூழ்கிச் சாம்ப வென்க. சாம்பல் - கூம்புதல். பிரகாசம் கெடுதல். ஆகையால் வந்து வரைந்து |