| கொண்டு செல் என்பது குறிப்பெச்சம். சுடர்விளக்கு, தடம் - பெருமை. உயிர்ப்பு - பெருமூச்சு. மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாவல். (475) கையறு தோழியை நையிடை யாற்றல் அஃதாவது தலைவி வருந்தல் கண்டு செயலற்ற தோழியைத் தலைவி யானவள் மணலாற் கரைகோலிக் கடலினைக் காத்தாற்போல நிறையினாற் காமத்தைத் தடுத்த நம் மனம் அழியக்கண்ட விழிகள் தனக்குள்ள துன்பினை பக்கத்தே வெளிப்படுத்தி நீத்தற்குப் புனலூற்றுகின்ற தெனக் கூறாநிற்றல். | | அயிர்த்திர ளாலடர் வாரியைக் காத்தென வார்நிறையால் | | | செயிர்த்தவன் காமந் தகைத்தே நமதுளந் தேய்ந்தழிய | | | வயிர்த்திர ளேங்கும்வண் சாரல்வில் லோற்கண்ட வாள்விழிமன் | | | உயிர்த்தய லேயிடர் நீப்பக்கொ லாம்புன லூற்றுவதே. |
(இ - ள்.) மணற்கூட்டத்தான் எல்லாப் பொருளையுந் தன்னுட் செறிக்கின்ற கடலினை (க் கரைகோலிக்) காத்ததைப் போலப் பொருந்தி நிறையென்னுங் குணத்தால் அடிக்கப்பட்ட வலிய விழைவினைத் தடுத்து நம்முள்ளம் நைந்தழியக் கொம்பின் கூட்டங்கள் ஒலிக்கும் வளப்பம் பொருந்திய மலைப்பக்கத்து வில்லையுடைய தலைவனைக் கண்ட ஒளி பொருந்திய கண்கள் புனலினை யூற்றுவது மிகுதியாகத் துன்பம் வெளிப்பட்டு நீங்குதற்காகவா என்றனள் என்க. (வி - ம்.) துறை : என்னுயிர் வாட என்ற தோழியை ஆற்றுவித்தல். அயிர்மணல் - மணலாற் கடலைக் கரைகோலிக் காத்தல் அரிது. அது போலக் காமத்தைக் கற்பாற் காத்தலரிதென்க. தகைத்து - தடுத்து. தலைவனைக் காணலாலாகிய துன்பத்தைத் தானும் நீக்கிக்கொள்வான் என்பார் "உயிர்த்தயலே யிடர் நீப்பக் கொலாம் புனலூற்றுவதே" என்றனர். வயிர் - ஊது கொம்பு. மன் - மிகுதி மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்குதல். (476) வரைதல் வேண்டித் தோழிசெப்பிய புரைதீர் கிளவி அஃதாவது செயலற்று நின்ற தோழியைத் தலைவியாற்றுவிக்கத் தோழி தலைவனுடைய மலையிடந்தோறும் வள்ளிக்கொடியின் கிழங்கு வீழ்வன. தேனிறால் மலையெல்லாம் ஒழுகுவன. அருவிகள் ஓங்குவன. ஆதலால் அவன் பொய்ச் சூளுறவில்லை யெனக் கூறாநிற்றல். | | கிழங்குவண் சார லிடந்தொறும் வீழ்வன கேழ்த்தவள்ளி | | | முழங்குவண் டேனினஞ் சூழ்தேத் தடைமொய் யடுக்கமெலாம் | | | ஒழுங்குவ மாலை யருவியு மோங்குவ வொண்டொடியாய் | | | அழுங்குவ தேநமக் காக்கிப்பொய்ச் சூளுற்ற வண்ணல்வெற்பே. |
(இ - ள்.) ஒள்ளிய வளையலை யணிந்த தலைவியே ! வருந்தலை நமக்குளவாக்கிப் பொய்ச்சரதஞ் செய்த தலைவன் வெற்பின்கண் நிறத்துடன் கூடிய வள்ளிக்கொடிகள் வளவிய மலையின் பக்கங்கடோறும் கிழங்குகள் |