பக்கம் எண் :

களவுப் படலம்1177

(ஆழத்தில்) கீழிறங்குவன. ஆரவாரஞ் செய்கின்ற வண்டின் கூட்டங்கள் சூழ்ந்ததேன் கூடுகள் நெருங்கிய அடுக்கங்களிலெல்லாம் ஒழுங்காகப் பொருந்துவன. மாலை வடிவினவாக அருவிகளெல்லாம் ஓங்கி விளங்குவன. ஆதலாற் பொய்ச் சூளுற்றில னென்க.

(வி - ம்.) கேழ் - நிறம். தேன் - வண்டு. தேத்தடை - தேன் கூடு. பொய்ச்சூள் - பொய்ச்சரதம். அண்ணல் வெற்பினிடத்துக் கிழங்கு வீழ்வன. அடையொழுங்குவன, அருவியோங்குவன ஆதலான். அவன் பொய்ச் சூளுறவில்லை. அங்ஙனம் பொய்ப்பின் இவை யெல்லாம் நிகழாவாதலின் அவன் பொய்ச்சரதம் புகன்றானல்லன். என்பது போதரும். பிறரும், வள்ளி கீழ் விழா, வரைமிசைத்தேன் தொடா, கொல்லை குரல் வாங்கியீனா வென்றனர். இங்ஙனம் நிகழ்தலால் நாம் அவன் வெற்பினுக்குச் செல்வோமென்பது இறைச்சி. "வள்ளி கீழ் விழா" என்பதற்கு இனி வேடராலே கிழங்கு விரும்பப்படுவன ஆதலால் அவ்வேடர் கிழங்கு கெண்டுவதற்கு முன்னரேயாம் செல்வோமாயின் அவர் காணாவண்ணம் செல்லலாம் எனினும் பொருந்தும். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றுவித்தல்.

(477)

புரைதீர் கிளவி புல்லிய வெதிர்வு

அஃதாவது வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர்ந்த மொழியால் பொய் தோன்றுமாயின் ஆணவமலத்தினை வென்று இறைவனோ டிரண்டறக் கலந்தவர்கள் மீண்டு மாணவத்தோடு கூடியதாகும். ஆதலான் வேலர் பொய்ச்சரதங் கூறுவாரோ வெனக் கூறாநிற்றல்.

 மருளிற் பிணைந்துபொய்ச் சூளுறு வார்கொல்வை வேலரன்னாய்
 இருளிற் பிணைந்த விருவினை மாற்றியெல் லாங்கழிப்பி
 அருளிற் பிணைந்தவ ராங்கிரு ளோடு மணைந்ததொப்பாம்
 பொருளிற் பிணைந்ததம் வாய்மையிற் பொய்ம்மை புகுந்திடினே.

(இ - ள்.) இயற்கையாக ஆணவமலத்தால் கட்டுண்டல் காரணமாக வுளதாம் நல்வினை தீவினையாகிய இருவினையும் நீக்கி நிலையில் பொருளாகிய யாவற்றையுங் கடந்து இறைவன் திருவருளினோடு (இரண்டறக்) கலந்த பெரியார் அப்பொழுதே அவ்வியற்கை மலத்தினோடு கூடியதனை யொப்பாகும் உண்மைப் பொருளுடன் கூடிய தமது வாய்மையின்கண் பொய்யின்றன்மை புகுமாயின். ஆதலான் கூரிய வேற்படையையுடைய தலைவர் மயக்கத்தோடிணைந்து பொய்ச்சரதங் கூறுவரோ கூறாரெனக் கூறாநின்றாளென்க.

(வி - ம்.) பொய்ச்சூளுற்ற வண்ணல் என்ற தோழிக்குத் தலைவி பொய்யா ளெனக் கூறாநிற்றல். எல்லாம் - நிலையில் பொருள் யாவும் இருள் - ஈண்டாணவமலம். பிணைதல் - கலத்தல். அஃதாவது இறைவனோ டிரண்டறக் கலத்தல். வாய்மை - தலைவன் (நின்னிற்பிரியேன் பிரியினுயிர் வாழேன் எனக் கூறிய) உண்மை. மெய்ப்பாடு : அழுகை. பயன் : புரைதீர் கிளவியை ஏற்று ஆற்றாமை
நீங்கல்.

(478)

களவலராகச் செவிலி கட்டுரைத்தல்

அஃதாவது தோழி கூறிய புரைதீர் கிளவியைப் புல்லிய தலைவியின் களவினை வேலனை நினையார் பக்கலிற் பிழை மிகுதல்போல நந்தலைவி