பக்கம் எண் :

1178தணிகைப் புராணம்

யின்பால் சிறந்த பழியுளதாயிற்று. இனி நன்மை உளதாமே ஆகா. ஆதலான் எத்தகைப் பெருமையுடையார்க்கும் வரக் கடவன விலக்கலாகாதெனக் கூறாநிற்றல்.

 ஓங்குந் தணிகை வடிவேற் கடவுளை யுன்னலர்பால்
 வீங்கும் பிழையினம் மெல்லியன் மாதின் விழுக்குடிக்குத்
 தாங்கும் பழிமொழி சார்ந்தது நன்றினிச் சாருங்கொலோ
 யாங்குந் தணப்பரி தாம்வரும் பாலன யாவர்க்குமே.

(இ - ள்.) உயர்ந்த தணிகை மலைக்கணெழுந்தருளிய வேற்படையை யுடைய எல்லாப் பொருளையுங் கடந்து நின்ற முருகனை நினையார் பக்கலில் மிகுகின்ற பிழையினைப்போல மென்மைத் தன்மையினை யுடைய நந்தலைவியல் சிறந்த குடி தாங்கும்படியான பழிச்சொற் பொருந்தியது. நல்லது இனி எக்காலத்துப் பொருந்துமோ யாமறியேம். எத்தகைப் பெருமையுடைய பெரியார்க்கும் வரக் கடவனவற்றை எக்காலத்தும் நீக்குத லரிதாம் போலும் என்றன ளென்க.

(வி - ம்.) உள்ளலர் - பாலதிகரித்த பிழையைப்போல வென்க. மாதின் - மாதால். நன்று சாருமோ தணப்பரிதாம் என்க. மெய்ப்பாடு : மருட்கை. பயன் : உற்ற துரைத்தல்.

(479)

காமமெய்ப் படுப்பக் கண்டனள் கிளத்தல்

அஃதாவது களவலராகக் கட்டுரைத்த செவிலி பாங்கியர் பலர் சூழப் பொழிலிற்புகும் நந்தலைவிக்கு வனப்பு நூல் கூறும் அணிகளுள் வைத்து ஓர் அணி தோன்றுமெனக் கூறாநிற்றல்.

 மென்னூ லெழினியி னுள்ளே கதிர்த்த விளக்கொளிபோல்
 நன்னூல் கிளந்த வணியுட் கிடந்தோர் நலந்திவளும்
 பன்னூறு கோடிநற் பாங்கியர் சூழப்பைம் பூம்பொழில்வாய்ப்
 பொன்னூ புரங்கள் புலம்பப் புகுநம் புனக்கிளிக்கே.

(இ - ள்.) பல நூறு கோடிக்கணக்கான பாங்கியர்கள் சூழப் பசிய பொழிலிடத்துப் பொன்னாலாகிய காலணிகள் ஒலித்தல் செய்யச் செல்கின்ற காட்டின் கண்ணுள்ள கிளிமொழியன்ன மொழியினை யுடைய நந்தலைவிக்கு நூலானாகிய எழினிக்கட்டோன்றுகின்ற விளக்கொளிபோல நல்ல நூலிற் கூறிய அணிகளுள் வைத்து ஒரு நலந்திவளா நிற்குமென்றன ளென்க.

(வி - ம்.) துறை : காமக்குறிப்பு மெய்யிற்றோன்றக் கண்டு செவிலிகிளத்தல். கிளிக்குத் திவளுமென முடிக்க நன்னூல் - இதனை வடநூலார் க்ஷாமித்திரிகா லக்ஷண நூல் என்ப. அணி அதனுட் கூறிய முப்பத்திரண்டழகு. அதனுள் ஒரு நலமென்க. நலம் - காமக்குறி. எழினி - திரைச்சீலை. மெய்ப்பாடு : மருட்கை. பயன் : உற்ற துரைத்தல்.

(480)

அளவுமிகத் தோன்ற வறிந்தனள் கிளத்தல்

அஃதாவது காமமெய்ப்படுப்பக் கண்டனள் கிளந்த செவிலி மல நோயானது இற்ற காலத்து விரைந்து பொருந்துகின்ற உண்மை