| தலைவி யணங்குகண் டயிர்த்தல் கண்டு சாமியென்றயிர்த்த செவிலி தலைவி யுடையாளுக்குத் தோள்கள் மெலிந்தன; கண் மானம் சிதைந்தது. முருகற்காக உற்றவணங்கோ வேறு முண்டுகொலோ வெனக் கூறாநிற்றல். | | காம்பிய றோள்கண் மெலிந்தன சாம்பின கண்கனகம் | | | தேம்பிய மாமை சிதைந்தது தேவர் சிறைமுருக்கி | | | ஓம்பிய வேலர்க் குறுமணங் கோமற்று மொன்றுகொலோ | | | கூம்பிய கொங்கைக் குறுமணி மூரற் குறுந்தொடிக்கே. |
(இ - ள்.) குவிந்த தனங்களையும், சிறிய முத்தினையொத்த முறுவலினையுமுடைய வளையல்களையணிந்த நந்தலைவிக்கு மூங்கிலினை யொத்த தோள்கள் மெலிந்தன. கண்கள் குவிந்தன. பொன் நிறைந்த மாமை யென்னுங் குணஞ்சிதைந்தது. (சூரனாற்) றேவர்க்குளதாகிய சிறையினைக் கெடுத்து (அத்தேவர்களைக்) காத்த வேற்படையையுடைய முருகனுக்காகவுற்ற வருத்தமோ, அன்றி வேறு பேய் முதலியவற்றா னுளதாய வேறொன்றோவெனக் கூறினள் என்க. (வி - ம்.) துறை தலைவியினணங்கைக் கண்டயிர்த்தல். அணங்கு தெய்வம் பேய் முதலியன பிடிக்கப்பட்டவர்க்குத் தோள் முதலியன மெலிதல் முதலாயின உண்டு. ஆதலான் அயிர்த்தாளென்க. இனி அணங்கு துன்பமெனக் கொண்டு துன்பங்கண்டயிர்த்த தென்பாருமுளர். முருகனுக்காகவுற்ற வணங்கெனவே. முருகனென்னுந் தெய்வத்தாற் பிடிக்கப்பட்டனளோ வென்றெண்ணினாளென்க. மணி - முத்து. சாம்புதல் - கூம்புதல். பேய் கோட்பட்டார்க்கு மேற்கூறும் நிகழ்ச்சிகளுளவாகலின் "மற்றொன்று கொலோ" என்றனள். மெய்ப்பாடு : மருட்கை. பயன் : உற்றதுரைத்தல். (483) காதலி விழுநோய் கட்டினிற் றெளிதல் அஃதாவது வணங்கிடைத் தலைவி அணங்கு கண்டயிர்த்த செவிலி நம் மெல்லியலாகிய தலைவி புனஞ்சூழ்ந்த சாரலின்கண் கொள்ளப்பட்ட நோயினைக் கட்டினாற் றுணிவுறச் சொல்லெனக் கூறாநிற்றல். | | சில்லரிப் பன்மணி நூபுரச் சீறடிப் பேரமைத்தோள் | | | வில்லரிப் பைங்கட் கருங்குழல் வெண்ணகை மெல்லியலாள் | | | கொல்லரிப் பைம்புனஞ் சூழ்வளஞ் சாரலிற் கொண்டவெந்நோய் | | | சொல்லரிப் பன்றியன் னாய்கட்டி னாடித் துணிவுறவே. |
(இ - ள்.) அழகிய பன்றியினை யொத்த வலியுடைய கட்டுவிச்சியே. சிலவாகிய கற்களையும் பல மணிகளையும் (உள்ளிடு பருக்கையாக இட்ட) காலணியை யணிந்த சிறிய அடியினையும் பெரிய மூங்கிலினையொத்த தோளினையும் ஒளியுடன் கூடிய கீற்றுக்களையுடைய பசிய கண்களையும் கரிய குழலினையும் வெள்ளிய பல்லினையும் உடைய மென்மைத்தன்மையையுடைய நந்தலைவி கொல்லத்தக்க சிங்கங்களையுடைய |