பக்கம் எண் :

1182தணிகைப் புராணம்

வன் றிருக்குமரனை விரும்பிக் காவலையுடைய நகரிலுள்ளார் பெருந் திரளா நிற்க நீங்கினுந் தங்கினும் தீங்குளமா மெனக் கூறாநிற்றல்.

 தரளத் தொடையுந் தமனியத் தாருந் தனமுகட்டுப்
 புரளத் தொகுத்தவெல் லாநம்மைத் தாம்புற மாக்கியநோய்
 கரளத் தனிமிடற் றான்மகற் பேணிக் கடிநகரம்
 திரளத் தவிரினுந் தீங்கே யிருப்பினுந் தீங்குளதே.

(இ - ள்.) முத்துமாலையும் பொன்னரிமாலையும் முலையினிடத்துப் புரளா நிற்கக்கூடிய ஏடி (நங்களவுப் புணர்ச்சியைப் பலருமறிய) வெளிப்படுத்திய காமநோய் கறைக்கண்டத்தையுடைய ஒப்பற்ற இறைவன் திருக்குமரனாகிய முருகனை விரும்பிக் காவலோடு கூடிய நகரின் கண்ணுள்ளார் திரளாநிற்க (அக்காமநோய்) நீங்கினும் தீமையேயுளது. (நீங்காமல்) இருப்பினும் தீமையே யுள்ளதெனக் கூறாநின்றன ளென்க.

(வி - ம்.) எல்லா தோழி முன்னிலைப் பெயர். புறமாக்கிய - (நங்களவை) வெளிப்படுத்திய. நகரினுள்ளார் ஒருங்குகூடி வெறியாட்டைச் செய்து முடித்தலினாலே நோய் நீங்கின் நாங்கொண்ட நோய் காமநோயென்று வெளிப்பட்டு அலர்தூற்றற் கிடமாகும். இனி வெறியாட்டினால் அந்நோய் நீங்காதாயின் அணங்காயின் வெறியாட்டெடுப்ப நீங்கா நிற்கும் காமநோய் எங்ஙனம் நீங்குமெனவும் அலர்தூற்றுவார்கள் ஆதலால் "தவிரினுந் தீங்கேயிருப்பினுந் தீங்குளதே" என்றனள். இது தலைவியின் கூற்று. இனித்தமர் வெறியாட்டினைச் செய்ய அதனாற் காமநோய் நீங்கப்பெறின் தலைவர் மாட்டன்பின்றிக் கற்புநிலை குறைந்தாளெனப் பழிகூறுவர். அவ்வாட்டாற் காமநோய் நீங்காதிருப்பினும் ஒருவனை விழைந்து காமநோய் கூர்ந்தாள் எனவும் கூறாநிற்பர் (இது பிறன்கோட் கூறல்) தவிர்தல் - தங்குதல். மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த நகை. பயன் : வெறிவிலக்க வொருப்படுதல்.

(486)

வெருவிய தலைவிக்குத் தோழி விளம்பல்

அஃதாவது வெறியினை வெரீஇக் கிளந்த தலைவிக்குத் தோழி தலைவியே ! இவ்விடத்தினின்றும் நீங்கி யுள்ள முகாமற் குன்றையுறின் வெறிசூழ் வகையாதாம். ஆகையால் கவலையுற்று வருந்தல் வேண்டாம். நங்கருத்திலுற்றவை கெடுதலுற்று அது தவறுதலுண்டோ வெனக் கூறாநிற்றல்.

 கவலையுற் றாழ்வது வேண்டா நமது கருத்துறவு
 தவலையுற் றாழ்தல் வருதலுண் டேயித் தலைவிடுத்துச்
 சவலையுற் றுள்ள முகாமே யறக்குணத் தானறுந்தேம்
 துவலையுற் றார்பொழிற் குன்றுறி னென்வெறி சூழ்வகையே.

(இ - ள்.) இவ்விடத்தினின்றும் நீங்கித் துன்பமுற்று மனங் கெடாமல் அறம் நிறைந்த குணத்தையுடைய தலைவன் நல்ல தேத்துளி நிறைந்த சோலையினையுடைய குன்றினை நாமுற்றால் வெறியாட்டினைச் செய்யுந்தன்மை யாதாம். ஆதலால் (நாம்) கவலையுற்று (துன்பத்தில்)