| மூழ்குவது வேண்டாம். நங்கருத்திலுற்றது தவறுதலுண்டோவெனக் கூறின ளென்க. (வி - ம்.) இத்தலை விடுத்து உகாமே உறின் எனக் கூட்டுக. சவலை - துன்பம். துவலை - துளி. துவலையுற்றார் பொழிலென்க. துறை : வெறி கண்டஞ்சியது. மெய்ப்பாடு : இளிவரல் சார்ந்த நகை. பயன் : வெறி விலக்கற் கொருப்படுதல். (487) கழங்கு பார்த்துழிக் கழங்குமெய் யேயெனப் பழங்கண் டீரப் பாங்கி பகர்தல் அஃதாவது வெறியாடல் காரணமாக வெருவிய தலைவிக்குத் துணிபு கூறிய பாங்கி தலைவியே ! தன் குறிப்பாற் பிறிது பொருளினை மறைத்துக் கூறுவதுபோலத் தணிகை வரையின் கண்ணுள்ள விசாகன் தலைவிக்குத் துன்பத்தினைத் தந்தான். என்னு மொழிதான் தனக்குரிய பொருளைக் குறிப்பதன்றி இம்மலையினிடத்து இவ்வொழுக்கின் பகுதியையுடையனல்லன் என்று பொருள்தருமா வெனக் கூறாநிற்றல். | | குறிப்பாற் பிறிது பொருளினைச் சின்மொழி கூறுவபோல் | | | வெறிப்பாற் றணிகை வரையயில் வேற்கை விசாகன்கொலாம் | | | முறிப்பான் மையினெழி லாட்கணங் கீந்தா னெனுமொழிதான் | | | நெறிப்பான் மையினல னென்பது வோவிந் நெடுங்கிரிக்கே. |
(இ - ள்.) சிலவாகிய மொழியினையுடைய தலைவி சொற்களைத் தங்குறிப்பால் செம்பொருளையன்றி வேறு பொருளைக் கூறுவனபோல வெறியாட்டின் பகுதி யுடையவாகிய தணிகைவரையின் கண்ணுள்ள கூர்மை பொருந்திய வேலினைக் கையின் கண்ணுள்ள விசாக நாளிற் பிறந்த முருகன் போலும். தளிரின் தன்மையுடையளாகிய வனப்பினையுடைய தலைவிக்குத் துன்பினைத்தந்தான் மொழியானது இந்நெடிய மலையிடத்து (இக்களவொழுக்கமாகிய) நெறியின் தன்மையையுடையான் அலன் என்னும் பொருளைத் தருவதா அன்று. ஆதலால் களவொழுக்கினை யுடையான் என்னும் செம்பொருளைத் தருவதே யாகுமெனக் கூறினளென்க. (வி - ம்.) சிலவாகிய மொழியினையுடைய தலைவியே ! விசாகன் முறிப்பான்மையி னெழிலாட்கு அணங்கீந்தான் என்னும் மொழியானது (கற்கறித்து அட்டவன் முகநோக்கி நன்கட்டாய் என்றால் குறிப்பால் நன்கடவில்லை யென்னும் பிறிது பொருள் கூறுவதுபோல முறிப்பான்மையினால் அணங்கிய வில்லை முருகன் என்னும் பொருளைத் தாராது விசாகனை யொத்த ஒரு தலைவன் தளிரின் தன்மையால் வனப்பினையுடைய தலைவிக்கு அணங்கீந்தா னெனவும், முருகனானவன் தளிரின் தன்மையை யொத்த தலைவிக்குத் துன்பஞ் செய்தான் எனவும் பொருள்படுமாற்றை யறிக. இம்மொழி குறிப்புப் பொருளன்றிச் செம்பொருள் தந்ததென்பது குறிப்பெச்சம். "நெறிப்பான்மையனலன்" என்பதுவோ; ஓகாரம் : வினா. கழங்கு - கழற்சிக்காய். தாமரைக் கொட்டை முதலியவற்றாற் பார்க்கும் குறி. பழங்கண் - துன்பம் துறை ஒரு தலைவனால் தலைவி நோயுண்டிருக்கின்றாள் என்பதைக் கழங்கின் |