பக்கம் எண் :

1184தணிகைப் புராணம்

வாயிலாகக் குறிப்பானறிந்து கொண்ட பாங்கி அக்கழங்கா லறிந்தமை மெய்யே யெனக் கூறுதல் என்க. மெய்ப்பாடு : இளிவரல் சார்ந்தநகை. பயன் : வெறி விலக்கற் கொருப்படல்.

(488)

நின்வெறி யாட்டி னீப்பரி தாகு
மின்வெறி யாட்டென வேலனுக் குரைத்தல்

அஃதாவது கழங்கு பார்த்துழிக் கழங்கு மெய்யேயெனப் பழங் கண்டீரப் பகர்ந்த பாங்கி வேல மடக் கொடிக்கு வளர்கின்ற அணங்கினை நீக்குதலரிதாகும் நீ விரும்பிய வெறியாட்டினைச் செய்க வெறியாடல் செய்ய நின்னைத் தூண்டியதாயும் முடிதுளக்கா நிற்க வேற்கடவுள் தனக்குரிய பூசனையை ஏற்கவெனக் கூறாநிற்றல்.

 வேண்டிய வேல வெறியாட் டயர்க வெறிப்பநின்னைத்
 தூண்டிய தாயுந் துளக்க முடிசுடர் வேற்கடவுள்
 ஈண்டிய பூசனை யேற்க விவற்றா னிகப்பரிதால்
 மாண்டியல் வாட்கண் மடக்கொடிக் காற்ற வளரணங்கே.

(இ - ள்.) மாட்சிமைப்பட்ட இலக்கணம் பொருந்திய இளமை பொருந்திய கொடிபோல்பவளாகிய தலைவிக்கு மிகுதியாகவுள்ள துன்பினைப் போக்க வெறியாட்டினை விரும்பிய வேலனே ! வெறியாட்டினைச் செய்க. வெறியாட்டினைச் செய்ய நின்னைத் தூண்டிய தாயரும் (தங்கள்) முடியினை யசைத்தல் செய்க. ஒளி பொருந்திய வேற்படையை யுடைய கடவுளும் தனக்குப் பொருந்திய பூசனையை யேற்றுக்கொள்க. இச்செய்கைகளான் இந்நோயினை நீக்குதலரிதாகு மென்க.

(வி - ம்.) வேலன் - வேன்மகன்; இவனை யிக்காலத்துப் பூசாரியென்பர். வெறிப்ப - வெறியாடல் செய்ய. தாயு முடிதுளக்க. அணங்கு - நோய். பூசனையை வேற்கடவுளேற்க. இகத்தல் - நீக்குதல். மடக் கொடிக்கு வளர்கின்ற வணங்கை அயர்க, துளக்க, ஏற்க. இவற்றான் நீக்குதலரிதென்க. மாண்டவயில் வாட்கண் என்பது விகாரம். மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த நகை. பயன் : வெறிவிலக்க வொருப்படுதல்.

(489)

முசிழ்முலைப் பாங்கி முருகற் குரைத்தல்

அஃதாவது நின்வெறி யாட்டினீப்பரிதாகும் மின்வெறியாட்டென வேலனுக்குரைத்த தோழி முன்னவனே அடியேனறிந்த தலைவியி னணங்கு நின்திருவுள்ள மறியாததன்று. ஆகையால் மனையின் வேல னிரத்தற்காக நீ கலப்பது எமக்கு நன்மையைத் தருவதன்று, ஆகையால் நீங்கெனக் கூறாநிற்றல்.

 அடியே னறிந்த விளையா ளணங்கண்ட வாணர்மணி
 முடியே ருழுமடி முன்னோய்நின் னுள்ளமுன் னாததன்றே
 பொடியே "லகமும் போர்ப்ப வரைபுழை யாக்கியநீ
 கடியேல் வெறிமனை வேலோ னிரப்பக் கலப்பதன்றே.