பக்கம் எண் :

களவுப் படலம்1185

(இ - ள்.) தேவருலகத்தின்கண் வாழும் தேவர்கள் முடியாகிய ஏரான் உழப்பட்ட திருவடியினையுடைய யாவருக்கும் முற்பட்டவனே இளம்பருவத்தையுடைய இத்தலைவியின் அடியாளாகிய என்னாலறியப் பட்ட துன்பம் (அடிகள்) திருவுள்ளம் அறியாததன்று. (ஆகையான்) அணுத்திரள்கள் ஏழுலகத்தினையு மூடக் குருகுபெயர்க் குன்றத்தைப் புழையாம்படி செய்த அடிகள் நறுமணப்பொடி பொருந்திய வெறியாட்டினைச் செய்கின்ற மனையினிடத்து வேன்மகன் இரத்தற்காகக் கலப்பது (எமக்கு) நன்மை தருவதன்று ஆதலால் நீங்க வேண்டுமென்றன ளென்க.

(வி - ம்.) இளையாளணங்கு - (தலைவனால்) இளையாளாகிய தலைவிக்குள்ள நோய். தேவர்முடி மணியாகிய ஏரானுழப்பட்ட நிலமாகிய வடியையுடைய முன்னவன் என்க. மணியாகிய ஏரான் அடியாகிய நிலத்தை உழுதல் வணங்குந்தோறும் திருவடியானூறுண்டாகிப் படைச்சால்போல் தழும்பு பட்டிருத்தல். வேலன் பிள்ளையார் வேலினைத் தாங்கும் படிமத்தான். ஆதலான் நீங்கென்பது குறிப்பெச்சம். கடி - வாசனைப்பொடி. மெய்ப்பாடு : உவகையைச்சார்ந்த பெருமிதத்தைச்சார்ந்த நகை. பயன் : குறிப்பினால் வெறி விலக்குவித்தல்.

(490)

தையனோய் பிறிதெனத் தமர்கொளக் கூறல்

அஃதாவது முருகற்குரைத்த முகிழ்முலைப் பாங்கி இவட்கு ஞான சத்திதரனால் அணங்கு என்பார்கள். அத்தன்மையால் அழகினையும் அறிவையும் மாற்றிப் பசலையினையும் மயக்கத்தினையும் தந்தார்க்கு வளருகின்ற ஞானசத்தியைத் தரித்துள்ளான் என்னும் பெயரினை வழங்கப் பெறும் அறிவினைப் பெற்றன மெனக் கூறாநிற்றல்.
 ஒருஞான சத்தி தரனணங் காவலுட் கென்பவற்றான்
 வருஞான சத்தி தரனெனு நாமம் வழங்கவினிப்
 பெருஞானம் பெற்றனம் பேரமைத் தோளி பிணையுருவத்
 திருஞான மாற்றிப் பசலையு மையலுஞ் சேர்த்தவர்க்கே.

(இ - ள்.) ஒப்பற்ற ஞானசத்தியைத் தரித்தவனால் இத்தலைவிக்கு அணங்குளதாயிற்றென்று சொல்லுவார்கள். அத்தால் பெரிய மூங்கிலினை யொத்த தோளினையும் பெண்மான் போன்ற வடிவத்தின் கண்ணுள்ள வனப்பினையும் அறிவையும் நீக்கி (அவைகட்குப் பண்டமாற்றாக) பசலையையும் மயக்கத்தையும் செறித்தவர்க்கு வளருகின்ற ஞானசத்தியைத் தரித்தவனென்னும் பெயர் வழங்கப்பெறும் அறிவைப் பெற்றன மெனக் கூறினளென்க.

(வி - ம்.) சத்தி - வேல். தரன் - தரித்தவன். திரு - அழகு. பிணை - பெண்மான். இனிப் பிணைந்த உருவமென்றுங் கொள்வர். அமை - மூங்கில். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வெறிவிலக்குவித்தல்.

(491)

அன்னைக்கரிவை இன்னல் வேறென்னல்

அஃதாவது தையனோய் பிறிதெனத் தமர்கொளக் கூறிய பாங்கி அன்னையே ! தலைவியுற்ற நோயினுக்கு மலையாண் மகனைச் சங்கக்குழை