பக்கம் எண் :

1186தணிகைப் புராணம்

யான் புதல்வனை ஆறுமுகவனை இல்லின்கட் புகுத்தி ஆடலும் பாடலும் பேணி நின்று பேதுற்றனை யெனக் கூறாநிற்றல்.

 மாதுற்ற நோய்க்கு மலையாண் மகனை மதிபுரையும்
 காதுற்ற சங்கக் குழையான் புதல்வனைக் காமர்பொய்கைப்
 போதுற்ற வாறு முகவனை யிங்குப் புகுத்தி யன்னாய்
 பேதுற் றனைவெறி யாடலும் பாடலும் பேணிநின்றே.

(இ - ள்.) அன்னையே ! நந்தலைவியுற்ற (நோய் தணிதற்பொருட்டு) மலையாண் மகனும். மதியினையொத்த காதின்கட் பொருந்திய சங்க குண்டலத்தினையுடைய இறைவன் புதல்வனும் அழகிய தடாகத்தின் கண்ணுள்ள தாமரை மலரின்கட் பொருந்திய அறுமுகவனாகிய (நம் மிறைவனை) நம் மனையின்கட் புகச்செய்து வெறியாட்டினையும் (அதற் கியைந்த) பாட்டினையும் விரும்பி நின்று மயக்கமுற்றனை. ஆகலான் இந்நோய் முருகனால் வந்ததன்று அவனை யொத்த தலைவனால் வந்த தெனக் கூறின ளென்க.

(வி - ம்.) பேது - மயக்கம். இந்நோய் தலைவிக்கு முருகனால் வந்த தன்று. அவனை யொத்த தலைவனால் உண்டாயது என்றறிவாயாக என்பது குறிப்பெச்சம். பொய்கை - சரவணப்பொய்கை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : இன்னல் வேறெனக் கூறி வெறி விலக்கல்.

(492)

அழிபா டுளத்தவ ளன்ப னுறத்தழீஇப்
பழிதீர்முறுவல் சிறந்தே தோற்றல்

அஃதாவது அன்னைக் கரிவை இன்னல் வேறென்று கூறாநிற்க வருத்தமுற்ற தலைவி அணங்கே ! நமக்கு முறுவலுளதாக, வாய்கூம்பத் தெய்வத்தா னிந்நோய் குறுவல் என்னு மன்னையோகை கொண்டாட முருகு விலங்கனையான் பாற் செல்லச் செய்ததெனக் கூறாநிற்றல்.

 முறுவ னமக்கினி தாக முரிபுரு வத்தணங்கே
 சிறுவ லுரையினர் வாய்நனி கூம்பத்தெய் வத்தின்மின்னோய்
 குறுவ லெனுமன்னை யோகைகொண் டாடக் குறுகியளாய்
 உறுவல் விலங்கனை யான்செல்லச் செய்ததவ் வொண்முருகே.

(இ - ள்.) வளைந்த புருவத்தினையுடைய தெய்வப் பெண்ணை யொத்த தோழியே ! நமக்குச் சிரிப்புள்ளதாகவும் சிறிய வலிய (பழிச் சொற் கூறுவோர்) வாய்மிகவுங் குவியவும் தெய்வத்தான் மின்னற் கொடியினை யொத்த தலைவியின் நோயினை நீக்குவலென்னும் (நம்) அன்னையானவள் உவப்பினைக் கொண்டாடாநிற்கவும் மிக்க யானை யனைய தலைவனை நாம் அணுகி அயரும் வண்ணஞ் செய்தது அம் முருகென்க என்றாளென்க.

(வி - ம்.) ஆக, கூம்ப கொண்டாட தலைவனைக் குறுகும்படி செய்தது யாரெனில் அம்முருகனே யாமென்க. அன்னை யயர்ந்த வெறியாட்டிற் றோன்றிய முருகனானவன் எனக்குச் செய்தது இதுவல்லாமல் வேறில்லை யென்பாள் அவ்வொண் முருகு செய்ததென்றனள். முருகு ;