| பண்பாகு பெயர். தலைவி யொரு தலைவனை விழைந்து நோயுற்றிருக்கின்றாளென்று பழிமொழிந்தோரது வாயானது தலைவன் வர நோய் நீங்கிக் குவிந்தன வென்பாள். "சிறுவல்லுரையினர்வாய் நனிகூம்ப" என்றனள். தலைவன் வருகையான் நோய் நீங்கினமை யுணராது தெய்வத்தான் இந்நோய் நீங்கியதென்று உவகை கொண்டாடும் அன்னை மகிழ்ச்சியுறுக வென்பாள், "தெய்வத்தான் இந்நோய் குறுவல் என்னும் அன்னை யோகைகொண்டாட" என்றனள். சிறுவல்லுரை - பழமொழி. அணங்கு - ஈண்டுத் தோழி. குறுவல் - கெடுப்பேன். வல் விலங்கு - யானை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைவனைக் கலந்து மகிழ்தல். (493) களவறிவுறீஇ வரைவு கடாதல் அஃதாவது அழிவு பாடுளத்தவளன்ப னுறத்தழீஇப் பழிதீர் முறுவல் சிறந்தே தோற்றுவித்தபின் தோழி அன்னையானவள் சுனைக்கரையின்கண் வருகையைக் கண்ணுற்று மலர்களை முருகனென்று கருதித் தூவினள். மீட்டொருநாட் கண்ணுற்று இவண் புகுந்தொழியா வேற்படையையுடையன் யாரென்று ஐயஞ் சிறந்தாளெனக் கூறாநிற்றல். | | வாரித் தலையின் மணிவே லொடுநின் வரவுகண்டு | | | வேரித் தளிமலர் வேலனென் றோக்கினண் மீட்டொருநாள் | | | பூரித்த தார்ப்புயத் தாய்கண்டு தாயிவட் புக்கொழியாச் | | | சீரித்த வேலவன் யாரையென் றையஞ் சிறந்தனளே. |
(இ - ள்.) அன்றொருநாள் அன்னையானவள் சுனைக்கரைக்கண் அழகிய வேற்படையுடன் நின்வரவினை யுணர்ந்து தேன்றுளியைச் சிந்துகின்ற மலர்களை வேற்படையையுடைய முருகனென்று கருதித் தூவி வணக்கஞ் செய்தனள். பருத்த மாலையினை யணிந்த புயத்தை யுடைய தலைவனே ! மற்றொருநாள் கண்ணுற்று இவ்விடத்தினின்று நீங்காத சிறப்புப் பொருந்திய வேற்படையை யுடையான் யார் என்றையஞ் சிறந்தனளாதலால் இனியிவண் வரைந்தன்றி வருதல் தகாதெனக் கூறினாள் என்க. (வி - ம்.) வாரித்தலை - சுனையின்கரை. ஓக்கல் - சிந்தல். சீரித்த - சிறந்த. தளி - துளி. யாரை ஐ : சாரியை. இனி வாரித் தலையில் மணி வேலோடு - கடலினுளதாகிய முத்தாரத்தினையணிந்த வேலென்பாருமுளர். உன்னை முருகனென் றையுற்றாளென்பாள் "மலர் வேலனென் றோக்கினள்" என்றார். மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (494) காவன்மிக லறிவுறீஇ வரைவு கடாதல் அஃதாவது களவினை யறிவுறுத்தி வரைவுகடாய தோழி மன்னனே ! புறத்தே தோன்றும்படியான முதுக்குறைவை யாண்ட உள்ளன்பும் காமமும் அலரும் உள்ளவாற்றைக் கண்டு தாய் பல பெண்களைக் காவலாக வைத்தன ளெனக் கூறாநிற்றல். | | புதுக்கலந் தேக்கு நறுநீ ரெனப்புறத் தேதிகழும் | | | முதுக்குறை வாண்டவுள் ளன்பொடு காமமு மொய்யலரும் |
|