| | விதுக்குறை வாணுத லாட்குள்ள வாகண்டு வெய்துநந்தாய் | | | மதுக்குழ லார்பலர் காவலி னேய்த்தனண் மன்னவனே. |
(இ - ள்.) மன்னவனே ! புதிய பாண்டத்தின் கண்ணே நிறைத்த நறுநீரினைப்போலப் புறம் பொசிந்து விளங்காநின்ற முதுக்குறைவினை யாட்சிசெய்த உள்ளன்பினோடு காமமும் அலரும் பிறையின் துண்டத்தை யொத்த ஒளி பொருந்திய நெற்றியினையுடைய எனக்குள்ளதனைக் கண்ணுற்றுச் சீற்றங்கொண்டு தேனோடு கூடிய மலரையணிந்த பெண்கள் பலரைக் காவலாகப் பொருத்தினளாகலான் இனியுன்னைக் குறியிடத் தெதிர்ப்படுதல் சாலாது வரைந்து கோடலே தகுதியென்றன ளென்க. (வி - ம்.) விது - சந்திரன். அலர் - பழிச்சொல். ஆதலால் இனிக் குறியிடத் தெதிர்ப்படுதல் சாலாது வரைந்து கோடலே தகுதியென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (495) வெறியச் சுறீஇ வரைவு கடாதல் அஃதாவது காவன்மிக லறிவுறீஇ வரைவு கடாய தோழி அரசனே ! நின்வழி நின்று நின்னேவலினைச் செய்யக் கட்டளையிடாமல் விழிநீரைச் சொரிய மொழிதடுமாற எங்களை நீ நீக்குவது நீதியோ அல்லதூஉம் பழிச்சொல்லேயன்றிப் பெரும் பாவமும் வந்தது; பல வாடுகளை வெட்டி நூலிற் சொல்லப்பட்ட பலியினைத் தூவி வெறியாட்டினைச் செய்ய அன்னை விரும்பின ளெனக் கூறாநிற்றல். | | வழிமொழிந் தேவல் செயப்பணி யாதுமன் னாபொழிய | | | விழிமொழி தள்ள விடுப்பது நீதிகொ லோவலதூஉம் | | | பழிமொழி யோபெரும் பாவமும் வந்தன்று பன்மறிசாய்த் | | | துழிமொழி வண்பலி தூய்வெறி யாட்டுகந் தாளன்னையே. |
(இ - ள்.) அரையனே ! உன் வழியே யாம் மொழிந்து நின்று உனக்கு ஏவல் செய்ய நீ பணித்துக்கொள்ளாது விழி நீரினைப்பொழிய மொழி தடுமாற எங்களை நீக்கி நிற்பது நீதியாமோ, அல்லதூஉம், (இந் நோய் காரணமாக) பல வாடுகளை வெட்டுமிடத்துப் பழிச்சொல் லொன்றோ பெரிய பாவமு முளதாயிற்று. அன்னையானவள் நூல்களிற் சொல்லப்பட்ட வெறியாடலை விரும்பினள். ஆதலான் நீ வரைதல் செய்து பழி பாவமின்றி வாழ்வாயாக வென்றா ளென்க. (வி - ம்.) மொழிவண்பலி - நூலிற் சொல்லப்பட்ட வளவிய பலி. ஆதலான் தலைவியை விரைவில் வரைந்துகொண்டு பழிபாவமின்றாக வாழ்வாயென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (496) சிறைப்புறத் தலைவற்குச் செறியெயிற் றிகுளை பிறர் வரவுரைத்து வரைவு கடாதல் அஃதாவது வெறியச்சுறீஇ வரைவு கடாய தோழி பரியும் வேழமும் தேரும் மணங்கருதி நிரைதல் கொண்டனஎன்று முரிமையினைக்கொண்ட தலைவர் காரணஞ் சிறிது மறிந்திலரெனக் கூறாநிற்றல். |