பக்கம் எண் :

1190தணிகைப் புராணம்

வரைவிற்குச் சான்றாகிய எரியினைச் சூழ்வல் என்பார் "முண்டகக் கைபற்றி னடுத்தெரி சூழ்வலென்றார். பரிவு - அன்பு. வருட்டி - தடவுதல் செய்து : வசஞ்செய்தலுமாம். எற்றுதல் - உள்ளத்திலொன்றை வைத்து வாக்கிலொன்றைச் சொல்லுதல் ஏற்றம் என்பதன் விகாரம் என்பாருமுளர். ஏற்றம் - துணிவு. இதனை "ஏற்றம் நினைவும் துணிவு மாகும்" என்னும் தொல். சொல். உரி. சூத்திரத்தானறிக. பற்றின் இன் சாரியை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வரைவு கடாதல். துறை நற்றாய் காதில் விழும் வண்ணம் தலைவியை முன்னிலையாக்கித் தோழி கூறல்.

(498)

ஒண்டொடித் தலைவி உயிர்செல வடுத்த
வேற்று வரைவை மாற்றெனக் கிளத்தல்

அஃதாவது அன்னை கேட்பத் தலைவிக் குரைத்த தோழியை நோக்கி இன்னலுக்கிரையாக இருக்கச் செய்து யாங் காதலமாகவும் நம்மையுள்ளாது விடுத்தவரிடத்து நீங்காத நட்பினை முன்னர்த்தந்த ஊழானது மாறுபட்டு அயலார் பக்கலிலும் நட்பினையுளவாக்குமோ வெனக் கூறா நிற்றல்.

 எள்ளாத வின்னற் கிரையா விருத்திய தன்றிமன்யாம்
 விள்ளாத காதல மாகவுள் ளாது விடுத்தவர்பால்
 தள்ளாத கேண்மைமுன் பேதந்த பாலுந் தலைதிறம்பி
 நள்ளாத வேதிலர் பாலினு மாக்குங்கொ னன்னுதலே.

(இ - ள்.) நல்ல நெற்றியினையுடையாளே ! ஒருவராலும் இகழாத துன்பினுக்குணவாக இருக்கச் செய்த தல்லாமல் மிகவும் நீங்காத காதலினை யுடையமாக நினையாது (நாம் வருந்த) நீங்கிய தலைவரிடத்து நீங்காத நட்பினை முன்னரே தந்தருளிய தொல்லூழானது முறைதவறி மாறுபாடடைந்து (நம்முடன்) நட்பினைக் கொள்ளாத அயலாரிடத்திலும் நம்மைச் சேர்க்கும்போலு மெனக் கூறாநின்றன
ளென்க.

(வி - ம்.) துறை தனதுயிர் செல்லும்படியாக அடுத்த வேற்றுவரைவை, மாற்றுவாயென்று தோழிக்குக் கிளத்தல். மன் காதலமாக - மிகுந்த ஆசையுடையேமாகவும். பாலும் - ஊழும். தலைதிறம்பி - முறை திறம்பி. ஊழானது தலைவரிடத்தல்லாமல் நொதுமலரிடத்து வரைவை யாக்கிவிடுமோ, இன்னற்கு இரையாக இருத்தியதல்லாமலும் இவ்வாறு மாக்குங்கொல்லோவென முடிக்க. மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல்.

(499)

பிரியின் வாழாப் பெற்றிமை தலைவற்
குரையெனத் தோழிக்கு வரிவளை கிளத்தல்

அஃதாவது ஒண்டொடித் தலைவி உயிர் செலவிடுத்த வேற்றுவரைவு மாற்றெனக் கிளந்த தலைவி முறுவலினையும் வாயினையும் விழியினையு முடைய தோழியே ! (கலைகள் யாவற்றையும்) அறிந்தவர்களையுந் தெளிவித்தற் கமைந்த தெளிவினையுடையார்க்கு அன்றில்புடை பெயரா முயக்கம் புரிந்தாலும் பிரிந்தால் உயிர்வாழ்த லரிதெனக் கிளவாயெனக் கூறாநிற்றல்.