| தீட்டிக் கூந்தலின்கண் மலரினைச் செருகி (இருவர்க்கும்) ஊழான் பொருந்திய அன்பான் என் மார்பினிடத்துத் தன் முகத்தினை வைத்து முத்தங்கொடுத்து மீண்டனன் இதனை நீ தாய்க்குச் சொல்லக் கருதின் குற்றங்கலவாமற் சொல்லல் நன்றாமென்றன ளென்க. (வி - ம்.) மீளுற்றனன் என்று என் அன்னைக்கு நவை விரவாமல் நீ ஓதில் நன்றாகுமென முடிப்பாருமுளர். சூள் - சரதம். எலுவி - தோழி. வரித்தல் - எழுதுதல். முழுவல் - முத்தங் கொடுத்தல். அன்னைக்கு ஓதின் நவை விரவாமல் எனப் பிரிக்க. மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (503) ஆற்றாத் தன்மை தோற்றித் தலைவி யறத்தொடு நிற்பத் திறத்தொடு கிளத்தல் அஃதாவது அன்னைக்குரை யெனக் கிளந்த தலைவி அணங்கனையாய் ! தலைவன் என்னை வரையும் வண்ணம் வினாதலொன்று அல்லது என் அன்னைக்குத் தலைவியின் நோயைக் கெடுக்கத்தக்க மருந்து வரைதலாகிய இதுவே யாமென்று சொல்லுதலொன்று ஆகிய இவற்றுள் ஒன்று செய்யாயானால் யான் வருந்தற்குக் காரணம் நீயன்றி வேறில்லையெனக் கூறாநிற்றல். | | அளியே னினைதற்கு நீயன்றி யில்லை யணங்கனையாய் | | | களியேய் களிறனை யானை வரையக் கடாவலொன்றோ | | | வெளியே யனைக்கென் விழுப்பெரு நோயை விளிக்கவல்ல | | | தெளியேய் மருந்திது வென்பதொன் றோசெய்க லாயெனினே. |
(இ - ள்.) தெய்வப் பெண்ணினை யொத்த தோழியே ! மதக்களிப்பினைப் பொருந்திய யானையை யொத்த தலைவனை என்னை வரைந்து கொள்ளும் வண்ணம் வினாவல் ஒன்று (அல்லது) வெளிப்படையாக அன்னையினுக்கு மிகப் பெரிய காம நோயினை நீக்கல் வல்ல தெளிதல் பொருந்திய மருந்து (தலைவனை வரைந்து கோடலாகிய) இது என்ப தொன்று இவ்விரண்டினுள் ஒன்றைச் செய்கலாய் எனில், நின்னால் அளி செய்யத்தக்க யான் வருந்துதற் காரணம் நீயன்றி வேறில்லை யென்றன ளென்க. (வி - ம்.) தெளிந்து ஏய்ந்த மருந்தென்க. வெளியே வெளிப்படையாக. மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : வெளிப்படையாக அறத்தொடு நிற்றல். அறத்தொடு நிற்றல் - களவு வெளிப்படுத்தல். (504) வணங்கிடைத் தலைவி யணங்கெதிர் கண்ட புகர் தபு செவிலி யிகுளையை வினாதல் அஃதாவது ஆற்றாத்தன்மையைத் தோற்றி அறத்தொடு நிற்பத் திறத்தொடு கிளந்த தலைவியின் அணங்கினைக் கண்டு செவிலி நல்ல நெற்றியினையுடைய தோழியே ! வீராட்டகாசன் கருணையில்லாதார்க்கு ஒடுங்குதல் திகழ்ந்தவாறுபோல மலைச்சாரலில் நின்னோடு விளையாடினாள் ஒளிவாடினள் இதற்குக் காரணமென்னை யெனக் கூறாநிற்றல். |