| | கடுக்கந் தரம்வைத்த வீராட்ட காசன் கருணையில்லார்க் | | | கொடுக்கந் திகழ்ந்தென வொள்ளொளி வாடின ளொண்டொடியாள் | | | அடுக்கந் திகழ்வரை யாங்குநின் னோடடுத் தாட்டயர்ந்தாள் | | | நடுக்கந் திகழிட் டிடையக லல்கு னறுநுதலே. |
(இ - ள்.) (முலையின் பாரத்தால்) நடுங்குதல் விளங்குகின்ற சுருங்கிய இடையினையும் அகன்ற அல்குலினையும் நறிய நெற்றியினையு முடைய தோழியே ! நஞ்சத்தினை மிடற்றின்கண் ணடக்கிய வீராட்ட காசத்தின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் கருணையில்லாதார்க்கு ஒடுங்குதல் திகழ்ந்தவாறுபோல ஒள்ளிய வளையலினை யணிந்த தலைவி மலைச்சாரலாகிய அவ்விடத்து நின்னொடு பொருந்தி விளையாட்டினைச் செய்தனள். ஒளிவாட்ட முற்றனள் இதற்குக் காரணமென்னை யென்றன ளென்க. (வி - ம்.) அணங்கு - நோய். அடுக்கம் - மலைச்சாரல். இட்டிடை - சுருங்கிய நுசுப்பு. மெய்ப்பாடு : பெருமிதஞ்சார்ந்த நகை. பயன் : வெளிப்படையாக அறத்தொடு நிற்றல். (505) களிறிடை விலக்கி ஒளிறுவே லிறைவன் மின்னிடைக் குதவி யன்னைக் குரைத்தல் அஃதாவது வணங்கிடைத் தலைவி யணங்கெதிர் கண்ட புகர்தபு செவிலி இகுளையை வினாவ அவ்விகுளை அன்னையே. வலியோடு கூடிய தோளினையுடைய தலைவனொருவன் குமரிச்சுனையின்கண் தலைவி மூழ்கி மீண்ட நெறியின்கண் வேழமான தடர்த்தலைச் செய்ய அதனை யிருத்தித் தலையளி செய்து தன்பொருட்டு எம்மவரோடு தலைப்படலைக் கொள்வா யென்றன ளெனக் கூறாநிற்றல். | | குமரித் தடஞ்சுனை யாடினண் மீண்ட குறுநெறியின் | | | அமரிற் றலைமடங் காமத வேழ மடர்ப்பவிரீஇத் | | | தமரிற் றலைப்பிரி யாமைத் தலையளித் தேதனக்கங் | | | கெமரிற் றலைப்படல் கோடியென் றானொ ரெறுழ்ப்புயனே. |
(இ - ள்.) வலிமை பொருந்திய புயங்களையுடைய ஒரு தலைவன் நந்தலைவி பெருமை பொருந்திய குமரிச்சுனையின்கண் நீராடினளாகி மிடலுற்ற வழியின்கண் போரின்கண் தலைமடக்குதலில்லா வேழ மொன்று வந்தடர்த்தலைச் செய்ய (அதனை யத்தலைவன்) அவ்விடத்தே நிற்கும்வண்ணம் செய்து (நந்தலைவி) தம்மவரிடத்தினின்றும், நீங்கா வண்ணம் தலையளி செய்து (அத்தலைவன்) தன்னிமித்தம் எம்மவரிடத்தில் பொருந்துதலைக் கொள்வாயாக வென்றன னென்றா ளென்க. (வி - ம்.) துறை : ஒளிறு வேலிறைவனானவன் களிற்றினை இடையே விலக்கி இடையினையுடைய தலைவிக்குத் தானுதவிய உதவியினைத் தோழி யன்னைக் குரைத்தலென்க. நந்தலைவி நம்மவரிடத்தினின்றும் நீங்காவண்ணம் அவன் தலையளி செய்தானென்பாள். "தமரிற் றலைப்பிரியாமை தலையளித்தென்றார்" என்க. அங்ஙன முதலிய தன் நிமித்தம் நீயுதவல் எமரிற் றலைப்படல் கோடியென்றா ரென்க. தலைவியை நோக்கி |