| எமரிற்றலைப்படல் கோடியெனவே என்னை வரைந்து கொள்ளென்பது போந்த பொருளாகக் கொள்க. எமர் - ஈண்டுத் தலைவனுடைய சுற்றத்தார். தனக்கு அங்கு என்றார் என முடிக்க. மெய்ப்பாடு : பெருமிதம் சார்ந்த நகை. பயன் : வெளிப்படை. (506) நற்றாய்க்கன்னை பெற்றியீதென்றல் அஃதாவது களிற்றினை இடையே விலக்கிய தலைவன் தலைவிக்குதவி யதனைத் தோழி செவிலிக் கறிவிப்ப அச்செவிலி முலையும் மூரலும் அரும்பிற்றில. விழிக்காவி யளியொடு மேவியிருத்தலை விரும்பிற்றில ஓதிமலர்ச்சுரும்பாற் றிவண்டிலது. சுடர்த்தொடியானவள் காமன் கருப்புவில்லால் வருந்தின ளெனக் கூறாநிற்றல். | | அரும்பிற் றிலமுலைத் தாமரை மூர லணித்தளவம் | | | விரும்பிற் றிலவிழிக் காவி யளியொடு மேவன்மலர்ச் | | | சுரும்பிற் றிவண்டில தோதியென் னேநஞ் சுடர்த்தொடிவேள் | | | கரும்பிற் றுவண்டனள் போலும்வில் லார்ந்த கனங்குழையே. |
(இ - ள்.) ஒளி பொருந்திய கனவிய காதணியையுடைய நற்றாயே (நந்தலைவிக்கு) முலையாகிய தாமரையும் மூரலாகிய முல்லையும் தோற்றிற்றில்லையாம். விழியாகிய காவிகள் அளியுடன் மேவலை விழைந்தனவில்லை கூந்தலானது மலரின் கண்ணுள்ள வண்டினங்களால் திவண்டிலது. இவை யிங்ஙனமாக ஒளி பொருந்திய வளையலினை யணிந்த தலைவி மாரன் கருப்புவில்லாற் றுவண்டனளிஃதென்ன வாச் சரியமென்றன ளென்க. (வி - ம்.) விழிக்காவி யென்றதற்கேற்ப. "அளியொடு மேவல்" என்றார். அளி - கிருபை வண்டென இரு பொருள். திவளல் - விளங்கல். துவண்டனள் - வாடினள். போலும் ஒப்பில் போலி மெய்ப்பாடு : பெருமிதஞ் சார்ந்த நகை. பயன் : வெளிப்படையால் அறத்தொடு நிற்றல். (507) அன்னது நற்றாய் தன்னையர்க் குறுத்தல் யாழியன் மொழிக்குத் தோழி கிளத்தல் அஃதாவது நற்றாய்க்கு அவள் தோழியாகிய செவிலி தலைவியின் றன்மையீற்றென வுரைப்ப நெற்றியினையுடைய தலைவியே ! நற்றாய் வாயான் அறிந்த வென்னையர் தழலெனத் தடங்கண் சேந்து இஃது பால்வரை தெய்வத்தின் செயலேயென்றாறுத லடைந்தனர் எனக் கூறா நிற்றல். | | என்வாய் மொழியன்னை வாயி னறிந்த வினியநற்றாய் | | | தன்வா யறிந்து தழலெனச் சேந்து தடங்கண்மலர் | | | முன்வாய் விதியன்றி யில்லையென் றாறினர் மொய்யமரில் | | | பின்வா யடிபெய ராதவென் னையர் பிறைநுதலே. |
(இ - ள்.) பிறையொத்த நுதலினையுடைய தலைவியே என் வாய் மொழியினை யறிந்த செவிலித்தாயின் வாயினறிந்த நற்றாயீடங் குறிப்பா |