| னறிந்து நெருங்கிய போரிற் பிறக்கடியிடாத வென்னையன்மார் தழலினை யொப்பக் கண்மலர் செம்மை நிறமுற்று முன்னைய ஊழன்றி வேறில்லை யென வாறுதலுற்றன ரென்றாளென்க. (வி - ம்.) அடிபெயராத என்னையர் நற்றாய் வாயினறிந்து என்க. விதி - ஊழ். என்னையர் - தந்தை தன்னையர் என்க. மெய்ப்பாடு : உவகை. பயன் : நற்றாய் அறத்தொடு நிற்றலை யுணர்தல். (508) வடிநெடு வேலோன் கடிவரு மாறு வடுவகிர் கண்ணிக்குக் கடுமொழி கிளத்தல் (1)அஃதாவது அன்னை நற்றாய் தன்னையர்க் குறுத்தல் யாழியன் மொழிக்குக் கிளந்த தோழி நீர்மேலெழுதிய எழுத்தினைப்போல நிலை யுதலிலவாம் வண்ணம் நந்துன்பம் நீங்கும் வழியை மனதின்கட் சிந்தித்து நான் துன்புறுநாள் நீட்டியாது வரைதற்கு அன்பர்வரப் புனல்போ லொழுகுகின்ற காதலை யன்பான் மறைப்பாயாக வெனக் கூறாநிற்றல். (2)அஃதாவது அன்னை நற்றாய் தன்னையர்க்குறுத்தல் யாழியன் மொழிக்குக் கிளந்த தோழி முலையினையுடைய தலைவி தலைவர்மாட்டெழுகின்ற காதலை நீரில் எழுதிய எழுத்தினைப் போல நந்துயர் நீங்கும் வண்ணம் மனதிற்கண்ணி வரையுநாளெந்நாளோ வென்று நாம் வருந்தி யிருக்கு மிகாநின்ற காதலை நாள்மிகாவண்ணம் வரைதற்குவர மறைப்பாயாக வெனக் கூறாநிற்றல். | | வள்ளத் தெழுந்த வனமுலை யாயன்பர் வந்திடலும் | | | பள்ளத் தெழும்புனல் போலெழுங் காதலைப் பண்பின்மறை | | | வெள்ளத் தெழுது மெழுத்தென நந்துயர் வீடுநெறி | | | உள்ளத் தெழுதி யுறுநாள் கழியா துஞற்றுதற்கே. |
(இ - ள்.) கிண்ணம்போற் றோன்றிய முலையினையுடையாய் ! நீர் மேல் எழுதிய எழுத்தினைப்போல (நிகழ்கின்ற காலத்துளவாம்) நந்துக்கம் நீக்கும் வழியை மனதின்கண்ணே தலைவன் வரையும் நாளெந் நாளோ வென்று நாம் வருந்தியிருக்கின்ற நாள்கள் மிகுதியாகா வண்ணம் வரைதற்கு அன்பர்வரப் பள்ளத்திற் செல்ல வெழும் நீரொழுக்கினைப்போல எழுகின்ற காதலைப் பண்பினால் மறைப்பாயாக வென்றன ளென்க. (வி - ம்.) வடு - மாவடு. கடி - மணம். உஞற்றுதற்கு மறைப்பாயாக வென்க. வந்திடலும் எழும் ஆசை யென்க. நெறி உஞற்றல் - முறையே நம்மை வரைதல். உள்ளத்தெழுதி - மனத்திற்கண்ணி. உஞற்றல் வினை தலைவனது. உறு - மிக்க. நாள் கழியாது மிகாது. நீரிலெழுத்தும் கனவும் நிகழ்காலத்து மெய்யாய்ப் பின்னர் பொய்யா மென்பதை "நீரிலெழுத்தும் நிகழ்கனவும்" என்னும் ஆகமத்தானுணர்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றுவித்தல். (509) மழைமேல் வைத்து வரைவு கடாதல் அஃதாவது வடிநெடு வேலோன் கடிவனாமாறு வடுவகிர்க் கண்ணிக்குக் கிளந்த தோழி இம்மலையின்கண் முகிலே ! கோடையின் |