பக்கம் எண் :

களவுப் படலம்1199

(வி - ம்.) உன் தீங்கும், தலைவியின் குடிப்பிறப்பு முதலியனவும் முறையே மூங்கையும் வாக்கியு நேருமென்க. ஊமையும் வாக்கியும் கூடியவிடத்து சொன்னிகழ்ச்சியிலாம் பயன்பெறப் படாவாறுபோல இவைகளிருந்தும் பயன்படாவென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : பெருமிதஞ்சார்ந்த நகை. பயன் : வரைவு கடாதல்.

(513)

வையிலை வேலோன் வரைவுடன் பட்டமை
பையர வல்குற் பாங்கி பகர்தல்

அஃதாவது இல்லுங்குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்பக் கூறிய தோழி மெல்லிய சொல்லினையுடைய தலைவியே துயர் வீழ்க சிறக்கத் துவன்ற மனமெய்தற்கு அடுத்தனன் எனக் கூறாநிற்றல்.

 வாழிய நீதுயர் வீழ்கநின் மாமை வளஞ்சிறக்க
 கேழியல் யாவ ரிடத்துமில் லோன்கிளை யோர்துவன்ற
 ஊழியல் வேத வொழுக்கமை சான்றோ ருடன்குழும
 யாழியன் மென்மொழி யாயடுத் தான்மண மெய்துதற்கே.

(இ - ள்.) யாழிசையின் இலக்கணமமைந்த மொழியினையுடைய தலைவியே தனக்கொப்பாந்தன்மை யாவரிடத்தும் இல்லாத தலைவன்தன் சுற்றத்தினர் நெருங்க இலக்கண முறையோடு கூடிய உண்மை நூலிற் கூறிய ஒழுக்கமமைந்த அறிவானமைந்த பெரியோர் குழும வரைந்து கோடற்கடுத்தனன் நீ துயரினை நீக்குவாயாக நின் அழகின் வளஞ் சிறக்க ஆதலான் நீ வருந்தற்கவெனக் கூறின ளென்க.

(வி - ம்.) கேழ் இயல் யாரிடத்தும் இல்லோன் - ஒப்பாந்தன்மை ஒருவரிடத்தும் இல்லாதவன். கேழ் - ஒப்பு. ஊழ் - முறை. வாழிய : அசை யெனினுமாம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலை மகளை யாற்றுவித்தல்.

(514)

உழந்த துயரத் தோக்கமு மெதிர்ந்த
தழைந்த மகிழ்ச்சியுந் தலைவி கிளத்தல்

அஃதாவது வையிலை வேலோன் வரைவுடன் பட்டமை பையரவல் குற்குக் கிளந்த தோழிக்கு வரைவினை நீட்டிக்குந் தலைவரைப் பெண்களுக்கு நிறையினையுடைய உள்ளத்தின்கண் ஐம்பொறியின் பயனைப் பெறுதலரிதாகும் கனவின்கண்ணே மாட்டுதல் செய்து வருந்தும் வருத்தம் கௌவையினையும் நீக்கி திருவினைத் தரும் நல்வினை இனி மேவுவ தெனக் கூறாநிற்றல்.

 நீட்டித்து மன்றலை நீப்பவர்ப் பெற்றோர் நிறையுளத்துப்
 பூட்டித் தகைக்கும் பொறிப்பே றரிது புணர்கனவு
 மாட்டித் துகைக்கும் வருத்தமுங் கௌவையு மற்றுமன்னாய்
 வீட்டித் திருத்தரு நல்வினை யோவினி மேவுவதே.

(இ - ள்.) (களவொழுக்கினை) நீட்டித்து வரைந்து கோடலை நீக்குந் தலைவரைப்பெற்ற பெண்கள் நிறையினோடு கூடிய உளத்தின் கண்ணே (பொருளின் கண்) அழுந்தித் தடுக்கும்படியான (கண்டு கேட்டுண்டுயிர்த்