| துற்றறியும்படியான) ஐம்பொறியின் பயனைப் பெறுதலரிதாகும். அன்னையே இனி நம்மை வந்து பொருந்துவது கனவினிடத்துப் பொருந்தி நம்மை வருத்தும் வருத்தத்தினையும் பழிச்சொல்லினையும் பிறவற்றினையும் நீக்கிச் செல்வத்தினை நமக்களிக்கும் நல்வினையோ வெனக் கூறின ளென்க. (வி - ம்.) துறை - துயரத்தோக்கம் - துன்பத்தின் மிகுதி. அவர் வரைந்து கொள்ளின் கனவின் வருந்துன்பமும் பழிச்சொல்லும் ஏனையவும் நீக்கி அவரைக்கூடி யின்புறுதலாகிய நல்வினை இனிவரு மென்பாள் வருத்தமுங் கௌவையு மற்றுமன்னாய் வீட்டித் திருத்தரு நல்வினையோ வினி மேவுவது" என்றனள். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைவி யாற்றுதல். (515) மறுப்பர் கொலோவென மறுகுபு கிளத்தல் அஃதாவது உழந்த துயரத்தோக்கமும் எதிர்ந்த மகிழ்ச்சியுங் கிளந்த தலைவி தோழியே ! எம்மவர் செவ்வேலிறை யோதாதார் மாட்டுறுகின்ற துன்பினையுற் றழுந்துகின்ற என்னுள்ளத்தைவிட்டுப் போகாதார் மாட்டு மனந்துணிந்தனரோ அன்றிப்புக்க அயலார் மாட்டுத் துணிந்தனரோ புகலாய் எனக் கூறாநிற்றல். | | தீதிலர் மாட்டுச் சிறக்குந் தணிகைச்செவ் வேலிறையை | | | ஓதிலர் மாட்டுறு செல்லலுற் றாழெ னுளம்விடுத்துப் | | | போதிலர் மாட்டுத் துணிந்தன ரோபுக லாய்புகுந்த | | | ஏதிலர் மாட்டுக் கருத்தினை மாற்றி யெமரணங்கே. |
(இ - ள்.) தெய்வப் பெண்ணினை யொத்த தோழியே ! வரைவினைக் கருதிப் புகுந்த அயலாரிடத்துளவாகிய கருத்தினை மாற்றிக் குற்ற மிலவாகிய பெரியோரிடத்துச் சிறந்து தோன்றுகின்ற செவ்விய வேற்படையையுடைய இறைவனை ஓதாதவர் மாட்டுப் பொருந்துகின்ற துன்பம்போன்ற துன்பினையுற் றழுந்துகின்ற என்னுள்ளத்தினை விடுத்து நீங்காத தலைவர் மாட்டு வரைவினை உறுதி செய்தனரோ சொல்லுவா யெனக் கூறின ளென்க. (வி - ம்.) ஏதிலார் - அயலார். வரைவு கருதிவந்த வேறு தலைவர்கள். மறுகுபு - வருந்தி. மெய்ப்பாடு : உவகை. பயன் : தலைவியாற்றாமை நீங்கல். (516) தமர்வரை வேற்றல் இகுளை சாற்றல் அஃதாவது மறுப்பர் கொல்லென மறுகுபு கிளந்த தலைவிக்குத் தோழி இலக்குமியை யொத்த தலைவியே ! இறைவன் ஆசாரியனாக வெழுந்தருள அப்பொழுதே மாயா மலமும் கன்மமலமும் (ஆகந்துக மலமாதலால் ஆன்மாக்களிடத்து அத்துவிதமாக) பொருந்தாமையான் (சகசமல மாதலான் ஆன்மாக்களிடத்து அத்துவிதமாகப் பொருந்திய) ஆணவமலம் தன் சத்திகெடா நிற்ப அருட்சத்தியாம். அதுபோலத் தலைவர் வரப் பழிச்சொல் நீங்கித் தலைவர் வயத்தராவர் எனக் கூறாநிற்றல். |