பக்கம் எண் :

களவுப் படலம்1201

 குருவாய் வெளிக்கொள வீராட்ட காசக் கொழுஞ்சுடராங்
 கொருவா மலந்தணிந் தோங்கரு ளாயுறு மாயை கன்மம்
 மருவா மையினன்ப ரெய்தலுங் கௌவை மறைந்தெவரும்
 திருவா ளனையன்றி நாட்டில ரேட்டையிற் றீர்திருவே.

(இ - ள்.) இலக்குமியை யொத்த தலைவியே வீராட்டகாச மென்னுந் தலத்தின்கண்ணுள்ள செழித்த சுடர்வடிவாயுள்ள இறைவன் ஆசாரிய வடிவமாக எழுந்தருள அப்பொழுதே மாயாமலமும் கன்ம மலமும் (ஆகந்துகமல மாகலான் ஆன்மாக்களுடன் அத்துவிதமாக) பொருந்தாமையான் (சகசமலமாகலான் ஆன்மாக்களுடன் அத்துவிதமாகக் கலந்த) என்று நீங்காத ஆணவமலம் தன் சத்தி கெடாநிற்ப அருட்சத்தியாக உறுதல்போலத் தலைவர் இவண் பொருந்திய வளவில் களவான் நமக்குளவாம் பழிச்சொல்லெல்லாம் மறைய யாவரும் அப்பெருந் திருவாளனையல்லாமல் (வேறொருவனை உனக்கு நாயகனாக) நிலை பெறுத்தினாரில்லை ஆகையான் அத்தலைவனையே உறுதி செய்துள்ளனர். நீ துன்பத்தினீங்குவா யென்றன ளென்க.

(வி - ம்.) சுடரானது வெளிக்கொள ஆணவந் தணிந்து அருளாகி அவ்விறை வயத்தாமாறுபோலத் தலைவர் வந்தவளவில் பழிமறைய நமர்கள் அத்தலைவர் வயத்தராவரென்க. மறைந்து - மறைய : எச்சத்திரிபு. ஆணவமலந் தணிதல்போலக் கௌவை மறைந்ததென்க. ஏட்டை - இளைப்பு. தீர், ஆய் : விகுதி குன்றிய ஏவல் வினைமுற்று. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைவியை ஆற்றுவித்தல்.

(517)

அவன்வரைவு மறுத்துழி யணிவளைத் தோழி
யன்னைக் கணங்குறு மின்னலீ தென்றல்

அஃதாவது தமர்வரை வேற்றலைத் தோழி தலைவிக்குச் சாற்றிய பின்னர் அத்தோழி அன்னையே வேழத்தை அணைத்து விலக்கி அளாய் விடுத்தவர் தோட்புணையில்லாத வைகலில் தலைவியடையும் செல்லல் கடப்பரிதாமெனக்
கூறாநிற்றல்.

 அடுத்தவல் வேழம் வருமுலை யாகத் தழுந்தவணைத்
 தெடுத்தகை வேலின் விலகி யினமலர் சூட்டியளாய்
 விடுத்தவர் தோட்புணை யில்லா தவைகனம் மெல்லியலாள்
 கடுத்தவத் தீற்றிய செல்லலை யன்னாய் கடப்பரிதே.

(இ - ள்.) அன்னையே (தன்னை வந்து) அடுத்தலைச் செய்த வேழத்தினை வளருகின்ற முலை தோய்தற்குரிய மார்பின்கண்ணே அழுந்தும் படி அணைத்தல் செய்து தாங்கிய கையின் கண்ணுள்ள வேற்படையான் விலக்குதல் செய்து கூட்டமாகிய மலர்களைச் சூட்டி அளாவுதல் செய்து நீங்கிய தலைவர் தோளாகிய புணையில்லாத வைகல் நம்மெல்லிய தன்மையையுடைய தலைவி கடுவை மிக வுண்பித்தாற் போன்ற துன்பத்தினைக் கடத்தலில்லையாம் என்றன ளென்க.

(வி - ம்.) துறை, தலைவனது மணத்தைத் தமர்கள் மறுத்த காலத்துத் தோழியதனை யறிந்து தலைவியைப் பொருந்திய நோய்