பக்கம் எண் :

1202தணிகைப் புராணம்

இன்னதாகுமென அன்னைக்குக் கூறல். வருமுலை - வளருமுலை. தவ - மிக. மெல்லியலாள் கடப்பரி தென்க. மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : அன்னைக் கறிவித்தல்.

(518)

உதவிசெய் தலைவர்க் கல்லது நினையின்
மதர்விழி வாழ்க்கை யரிதெனக் கிளத்தல்

அஃதாவது அவன் வரைவு மறுத்துழி அன்னைக் கணங்குறு மின்னலீ தென்ற தோழி அன்னையே ! வேழத்தினை வென்றவர்க்கல்லாது வேற்றோர்க்கென விதிப்பின் கடலிடத்தே வாழேமென்றிருக்குந் தலைவி விரும்புகின்ற விளக்கமான இரேகையையுடைய தலைவர்க்கு நாமும் விதிப்பதல்லாமல் பிறர்மாட் டியைபில்லையெனக் கூறாநிற்றல்.

 வேழங் கடந்தவர்க் கல்லாது வேற்றோர்க் கெனவிதிக்கின்
 வாழங் கடலிடத் தென்றே யிருக்கு மடநடைமான்
 வீழங் கடிவரை மார்பரி னாமும் விதிப்பதல்லால்
 யாழங் கடர்மொழி யன்னாய் பிறரி னியல்பில்லையே.

(இ - ள்.) யாழிசையினைத் தன் இனிமையின் வென்ற மொழியினை யுடைய அன்னையே (தனக்கின்னல் குறித்துப் போந்த) யானையினை வென்ற தலைவர்க்கல்லாமல் வேறொரு தலைவர்க்கெனத் தந்தை தாயர் விதிப்பாராயின் கடலாற் சூழப்பட்ட உலகின்கண் வாழ்தலைச் செய்யே மென்றிருக்கும் அழகிய நடையோடு கூடிய மான்போன்ற மருண்ட பார்வையையுடைய தலைவி விரும்புகின்ற மணத்தினை (உயர்ந்த மக்களுக்குரிய) வரைகளையுடைய தலைவர்க்கே நாமும் விதிப்பதல்லாமற் பிறர்க்கு விதித்தல் இயல்பல்ல வென்றா ளென்க.

(வி - ம்.) வாழம் எதிர்மறைத் தன்மைப் பன்மை வினைமுற்று. வீழ்தல் - விரும்பல். கடி - விளக்கம். வரை - உயர்ந்த மக்களுக்குள்ள ரேகை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : அன்னைக்கறிவித்தல்.

(519)

அணிபடுத் தணங்கி னழகினுக் கொத்த
திணிவரைத் தோளனைச் செவிலி நாடென்றல்

அஃதாவது உதவி செய்த தலைவர்க்கன்றி நினையின் தலைவி வாழ்தலரிதெனக் கிளந்த தோழிக்குச் செவிலி அணிகலன்களை யணிந்து இவளழகுக் கொத்த மைந்தனைத் தலைவனாகக் கருதுவாயெனக் கூறாநிற்றல்.

 பாடக நூபுரங் கிண்கிணி பாதம் பருமமல்குல்
 சூடகந் தோண்முலை நித்திலந் தோடு குழைசெவிமெல்
 லாடக மாமல ரோதி யணிந்திவ ளேர்க்கியைய
 மாடக யாழ்மொழி யாய்மதி யாயொரு மஞ்சனையே.

(இ - ள்.) கால்களில் பாடகமும் சிலம்பும் கிண்கிணியும் அல்குலின் கண் பருமமென்னும் மேகலையினையும் தோளின்கண் வளையினையும் தனத்தினிடத்து முத்து மாலையினையும் காதின்கண் தோடு குழை