| இன்னண நிகழ்தலின் மின்னிழை மாதின் சிந்தை யென்னெனச் செவிலி வினாதல் அஃதாவது குஞ்சரங்கடிந்த குமரனையன்றி ஒரு மைந்தரு மின்றெனச் சொற்ற தோழிக்குச் செவிலி கிளிமொழியன்ன வசனங்களை யுடைய தோழியே ! ஓகையில்லாளாய்ப் பார்வை வழங்காளாய்ப் பகலோன் குடகடலிற் குளிப்பினும் உணவினை விரும்பாளாயுள்ளாள். நீ அணங்காடலை யாங்கள் நினைப்பினும் அறங்கடையெனக் கூறாநின்றாய் ஆதலான் இவளெண்ண மிற்றெனச் சொல்வாயாகவெனக் கூறாநிற்றல். | | அணியினும் பூசினு மோகையில் லாளடுத் தாயநல்லார் | | | பணியினும் பார்வை வழங்காள் பகலோன் குடகடலில் | | | தணியினும் பாளிதம் வேண்டா ளணங்கிற் றலைப்படுதல் | | | துணியினும் பாவமென் றாயிவ ளெண்ணஞ்சொல் லாய்கிளியே. |
(இ - ள்.) கிளிமொழியன்ன வசனங்களையுடைய தோழியே ! அணியப்படும் அணிகலன்களை யணிந்தாலும் பூசப்படுவனவாகிய சாந்த முதலியவற்றைப் பூசினும் (அவை காரணமாகச்) சிறிதும் உவப்பிலள். ஆயக்கூட்டத்தார் பணியினும் கடைக்கண் சாத்தாள். பகலோன் மேற்றிசைக் கடலிற் குளிப்பினும் பாளித முதலிய உணவினை விழையாள். (நீ) யாங்கள் இவள் நிலைமையறிந்து வெறியாட்டினைச் செய்ய ஒருப்படுதலையும் அறங்கடையென்றனை ஆதலான் இவளெண்ணம் இஃதெனச் சொல்வாய் என்றன ளென்க. (வி - ம்.) பகலோன் - சூரியன். குடகடல் - மேற்றிசைக்கடல். தணிதல் - மூழ்கல். பாளிதம் - சோறு. அணங்கு - வெறியாட்டு. பாவம் - அறங்கடை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : செவிலி தலைவி கருத்தறிதல். (522) வண்ணக் கிளிமொழி யெண்ண மீதென்றல் அஃதாவது இவ்வித நிகழ்ச்சி தலைவி மாட்டுளதாதலின் அவள் கருத்தென்னையென வினாவிய செவிலிக்குப் பாங்கி உற்றார்க்குரியர் பொற்றொடி மாதரெனக் கூறிய பொருளினைக் கடைப்பிடித்த தலைவியானை யோப்பித் தன்னைக் காத்த தலைவர் மணமுற்றாமை கூடுங் கொலோவெனத் துயரின் மூழ்கின ளெனக் கூறாநிற்றல். | | உற்றார்க் குரியவர் பொற்றொடி மாதரென் றோதுபொருள் | | | பற்றாதல் கொண்டநம் பாவை பகட்டின் பணைக்கைமுகத் | | | தெற்றா வொருகைத் தழீஇமலைந் தோப்பு மிறைவர்மணம் | | | முற்றாமை கூட்டுங்கொ லோவென வெந்துயர் மூழ்கினளே. |
(இ - ள்.) அன்னையே தன்னை யிடையூற்றினின்று நீக்கத் தீண்டின வர்க்குரியவராவர் பொன்னாலாகிய வளையினை யணிந்த மகளிரென்று (ஆன்றோர்கள்) சொல்லுகின்ற மொழியின் பொருளினைத் தனக்குப் பற்றுக் கோடாகக் கொண்ட பதுமையை ஒத்த நந்தலைவி பருத்த கையினையுடைய முகத்தின்கணெறிந்து என்னை யொருகையாற் றழுவுதல் |