| செய்த அவ் யானையினை ஓட்டிய தலைவர் மணம் (ஒன்றிய வூழின் றிறத்தால்) முற்றுப் பெறாமை கூடுங்கொல்லோ வென்று வெவ்விய துன்பத்தின்கண் மூழ்கினள் எனக் கூறினள் என்க. (வி - ம்.) எற்றா - அடித்து. தனக்காபத்து வந்துற்ற காலத்துத் தன்னைத் தீண்டிக் காத்த தலைவர்க்கே உரியவராவர் பெண்களென்க. ஓப்பல் - ஓட்டல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : அறத்தொடு நிற்றல். (523) மறுத்துழி யாற்றா வன்மொழித் தலைவிக்கு நிமித்தங் கூறி நீடா தென்றல் அஃதாவது வண்ணக் கிளிமொழி யெண்ண மீதென்ற தோழி இலக்குமியை யொத்த தலைவியே ! மன்றல்கூடிற்றென நற்சகுனங்களுள வாயின. இடக்கண்ணுந் தோளும் முலையும் ஆடின. அன்னைக்குச் சொல்லப் புகுங்கால் காகம் இடனோடிற்று. யாவர் தடை செய்யினும் மன்றல் நீட்டிப்பதில்லை யெனக் கூறாநிற்றல். | | கூடிற்று மன்ற லெனவே விரிச்சி குலாயதிடன் | | | ஆடிற் றலர்விழி வாங்கமைத் தோளு மணிமுலையும் | | | ஓடிற் றிடனின்று காக மனைக்குரைப் பான்புகுங்கால் | | | நீடிற் றிலதினி மன்றல்பொன் னேயெவர் நீப்பினுமே. |
(இ - ள்.) இலக்குமியை யொத்த தலைவியே ! மணங்கூடிற்றென்று சொல்லாநிற்க நற்சகுனம் குலாவியது. இடப்பக்கத்து அலர்ந்த விழியும் வளைந்த தோளும் அழகிய தனமும் ஆடின. அன்னைக்கின்று யானிம் மணவினையைச் சொல்லப் புகுங் காலத்துக் காகமானது இடப்பக்கம் நின்று வலமாயிற்று. இனி மணவினை யெவர் தடுப்பினும் நீட்டிப்பதில்லை யென்றா ளென்க. (வி - ம்.) விரிச்சி - நற்சகுனம். இடப்பக்கத்திலிருந்து காகம் வலஞ்செலல் நன்மை. பெண் மக்களுக்கிடக்கண் இடத்தோள் முதலியன துடித்தல் நன்மைக் கறிகுறி. விழி, தோள், முலை ஆடிற்று என்ற முற்றோடு தனித்தனி சென்றியைந்தது. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : அறத்தொடு நிற்றல். (524) தந்தை தன்னையர்க்குத் தாயினி துரைத்தல் அஃதாவது தமர்வரைவு மறுத்துழி யாற்றாத் தலைவிக்கு நிமித்தங் கூறி நீடாதென்ற தோழி நற்றாய்க்கறிவிக்க அவள் தந்தை தன்னையர்க்கு இரப்பும், நந்தனிக்குடியின் புகழ்மையும் நோக்கி மறாது பெண்மையால் ஆன்றோளைப் புணர்ப்பி னல்லாமல் அத்தலைவரானவர் கொடையாகப் பொருந்திய மூவுலகத்தோடு கொடுப்பினும் குவிந்த தனத்தினுக்கு விலையாகுமோ வெனக் கூறாநிற்றல். | | சான்றோ ரிரந்த விரப்பு நமது தனிக்குடியின் | | | வான்றோய் வனைய புகழ்மையு நோக்கி மறாதுபெண்மை |
|