| | யான்றோட் புணர்ப்பினல் லாற்கொடை சான்ற வவையுலக | | | மூன்றோ டளிப்பினு மாமோ முகிழ்ந்த முலைவிலையே. |
(இ - ள்.) நற்குணங்களான் அமைந்த தலைவர் இரந்த இரப்பினையும் நமது ஒப்பில்லாத குடியின் வான் முழுதையும் தோய்ந்தாலொத்த புகழ்மையு நோக்கி நாம் மறுத்தல் செய்யாது பெண்மைக் குணத்தானிறைந்த தலைவியைப் புணர்ப்பினல்லாமல் கொடையாகப் பொருந்திய அவைகளை மூவுலகத்தோடு கொடுத்தாலும் நந்தலைவியின் குவிந்த தனங்கட்கு விலையாகுமோ வென்றன ளென்க. (வி - ம்.) வான்றோய் வனையபுகழ் - வான் முழுவதையும் தோய்ந்தா லொத்த புகழ். எனவே விரிந்த புகழ் என்க. சான்றோர் - ஈண்டுத் தலைவர். முலைவிலை - இக்காலத்துப் பரியம் என்பர். மெய்ப்பாடு : உவகை. பயன் : தந்தை தன்னையர்க் கறத்தொடு நிற்றல். (525) வருவன வேற்று வழங்குவ தல்லது திருவிழை மாதர்க்குப் பொருளிலை யென்றல் அஃதாவது தந்தை தன்னையர்க்கு நற்றாய் அறத்தொடு நிற்கச் செவிலி உயிர்கட்குப் பதவியையும் அருளையும் செய்கின்ற இறைவனை யொப்ப அவர்கள் தருவனவற்றை யேற்று நாம் கொடுப்பினல்லாமல் முலைவிலைப் பொருள் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் இல்லையெனக் கூறாநிற்றல். | | உரையுணர் வாக்கை கடந்த பதமுவற் றாற்பணிக்கண் | | | விரையுநர் பாலருள் வீராட்ட காசன் விழையவவர் | | | வரையுட னாடு தருவன வேற்று வழங்கினல்லால் | | | தரையுள தோவிலை யாகும் பொருள்விண்ணுந் தானிலதே. |
(இ - ள்.) வாக்கினையும் உணர்வினையும் உடலினையும் கடந்து அப்பாற்பட்ட பதத்தினை (மேற்கூறிய) அம்மூன்றனால் துதி செய்தல் நினைத்தல் வலம் வருதல் முதலிய பணி செய்தலின்கண் அயராது செல்கின்ற அன்பரிடத்து அருளினைச் செய்கின்ற வீராட்டகாசத்தின் கண் ணுள்ள இறைவனை யொப்ப அத்தலைவர் மலைகளுடன் நாடு தருவன வற்றை நாம் ஏற்றுக்கொண்டு வழங்குவதல்லாமல் (நந்தலைவியின் முலைக்கு) விலையாகும் பொருள் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் இல்லை யென்றன ளென்க. (வி - ம்.) வீராட்டகாசன் ஆன்மாக்களிடத்துள்ள அசுத்தம் துக்கம் சடம் முதலியவற்றைத் தான் ஏற்றுக்கொண்டு சுத்தம், சுகம், நித்தியமாகிய பொருளைத் தருதலான் "பதமுவற்றாற் பணிக்கண் விரையுநர் பாலருள் வீராட்டகாசன்" என்றார். இதனை "தந்ததுன் றன்னைக் கொண்ட தென்றன்னைச் சங்கரா யார்கொலோ சதுரர்" என்னும் மணிவாசகப் பெருந்தகையின் திருவாக்கானறிக. ஆக்கை - உடல். உவற்றால் - உரை, யுணர்வு, ஆக்கை என்பவற்றால். விழைய : உவம உருபு. விண்ணுந்தானிலதே என்னும் உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. விலை ஈண்டு முலைவிலை. அது பரியம். மெய்ப்பாடு : உவகை. பயன் : வரைவுடன்படல். (526) |