பக்கம் எண் :

களவுப் படலம்1207

புரவலர்க் கிகுளை பொருளெனக் கிளத்தல்

அஃதாவது வருவன வேற்று வழங்குவதல்லது திருவிழை மாதர்க்குப் பொருளிலை யென்ற தாய் கருத்தினை யறிந்து தோழி இறை நம்மவர் விழைவினைக் கொடை பகுதியான முற்றுதல் செய்து தலைவியின் கருத்தினை நிறுவுதல் செய்வா யெனக் கூறாநிற்றல்.

 இடைப்பா லதுபெறின் முந்நீர் முதிர்ந்த விருநிலத்துக்
 கடைப்பா லதுந்தலைப் பாலது மாமெனுங் கட்டுரையின்
 நடைப்பான் மையும்பழு தாமோ விறைவநம் மார்விழைவு
 கொடைப்பான் மையின்முடித் தென்றோ நிறுவுதி கோற்றொடியே.

(இ - ள்.) (அறம் பொருளின்பம் என்ற மூன்றனுள்) நடுவணதாகிய பொருளினை (ஒருவன்) பெற்றால் கடலாற் சுற்றப்பட்ட இவ்வுலகின் கண் (அம்மூன்றனுள்) கடைப் பகுதியாகிய இன்பும் முதற் பகுதியாகிய அறனும் இயல்பின் உளவாகுமெனும் உறுதி மொழியின் ஒழுக்கத்தின் பகுதியும் குற்றமாகுமோ (ஆகா, ஆதலான்) இறைவனே நம்மவர் விழைவினைக் கொடையின் பகுதியான் முற்றுறச் செய்து (தலைவியின்) திரண்டவளை கழலுவதை யெக்காலத்து நிறுவுவா யென்றன ளென்க.

(வி - ம்.) தொடியை என்று நிறுவுவாய் என்றன ளென்க. துறை தோழி தலைவனை நோக்கிப் பொருள் கொண்டுவரக் கூறல். அறம் பொருள் இன்பம் மூன்றனுள் இடைப்பாலது பொருள். முன்னர் நின்ற அறத்தினையும் பின்னர் நின்ற இன்பினையும் தருதலான். "கடைப்பாலதுந் தலைப்பாலது மாமென்னுங் கட்டுரையின் நடைப்பான்மை யென்றனரென்க. நம்மார் - ஈண்டுத் தலைவியின் தமர்கள். மெய்ப்பாடு : உவகை. பயன் : பொருளின்றியமையா தென்றல்.

(527)

நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறிப்
பொருளினைக் கிளந்தவள் வரைவு கடாதல்

அஃதாவது புரவலர்க்கு இன்றியமையாதது பொருளென்று கூறிய தோழி வீராட்டகாசன் திருவடி செய்யும் இன்பினைப்போல மிக்க விருப் பினராயினும் உயர்ந்தோர் நன்னெறியின் வருமின்பமல்லது உயிர்கெடவரினும் பழியொடு வரும் இன்பினை விழையார் எனக் கூறாநிற்றல்.

 வழியா னுறுநர்க்கு வீராட்ட காசன் மலர்ப்பதம்போற்
 கழியா விழைவின ராயினுங் காழறு சான்றவர்நன்
 மொழியான் வருமின்ப மல்லது மொய்கதிர் வேற்றலைவா
 பழியான் வருமின்பம் பற்றா ருயிர்சாய் பதத்தினுமே.

(இ - ள்.) ஆசாரியனாதல் சிவதீக்கை முதலியவற்றை நெறியான் செவி யறிவுறுக்கப்பெற்ற பரிபாகமுடைய ஆன்மாக்களுக்கு வீராட்டகாசத்தின் கண்ணெழுந்தருளிய இறைவன் மலர் போன்ற திருவடிகள் நல்கும் இன்பினை யொத்த (தலைவர்) நீங்காத விழைவினை யுடையாராயினும் குற்றமற்ற பெரியோர்கள் நெருங்கிய கதிர்களையுடைய வேற்படையையுடைய தலைவனே ! புகழோடு கூடிய நன்மொழிகளான்வரும்