| இன்பத்தினையல்லது உயிர் கேடுறற்குரிய காலத்தினும் பழியோடு கூடிய இன்பத்தினை விரும்பாராதலான் நீயு மெங்களை மணஞ்செய்து அதனாலுளவாம் நல்லின்பினையடைவா யென்றன ளென்க. (வி - ம்.) உறுநர்க்கு மலர்ப்பதத்தினுள்ள விழைவைப்போல காமத்தில் விழைவுடையராயினும் நெறியான் வரும் இன்பினை விழைவர். பழியான் வரும் இன்பினை வெஃகாரென்க. நன்மொழியான் வருமின்பம் விதிப்படி வரைதலாலுளவாம் இன்பம். பழியான் வருமின்பம் விதிப்படியின்றிக் களவானுளவாமின்பம். நீயுஞ் சான்றோனாதலால் எங்களை மணந்து அதனாலுளவாம் நல்லின்பினை அடைவாயென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (528) கடுமொழி கூறி வரைவு கடாதல் அஃதாவது நன்மையுந் தீமையுந் பிறிதினைக் கூறிப் பொருளினைக் கிளந்து வரைவு கடாய தோழி மலைப்பக்கத்து வேடர் குழாங்கள் கிழங்கினை விழைந்து அதன் கொடியைக் கேட்டின் கண் நிலைபெறச் செய்யும் மலைநாடனே ! எங்கள் நலனை யுண்டு எங்களை நீத்தல் மரபோ எங்களைத் துன்பினின்று நீக்குவாயாய் நின் தேரிற் பரியினங்களைப் பூட்டுவாயாக வெனக் கூறாநிற்றல். | | முழங்கிய மாலை யருவியஞ் சாரன்மொய் வேடர்குழாம் | | | கிழங்கினை வேட்டெழு வள்ளியைக் கேட்டிடை நாட்டும்வெற்பா | | | வழங்குமென் றோளி நலனுண்டு நீத்தன் மரபுகொல்லோ | | | பழங்கணிற் றீரெம்மைப் பூண்கநின் றேரிற் பரியினமே. |
(இ - ள்.) மாலை போன்ற முழக்கத்தினையுடைய அருவிகள் ஓடுகின்ற அழகிய மலைப்பக்கத்தின் கண் வேடர் சூழாங்கள் கிழங்கினை விழைந்து எழாநின்ற வள்ளிக்கொடியினைக் கேட்டின் கண்ணே நிலைபெறச் செய்யும் மலைநாட்டினையுடைய தலைவனே ! உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிராதலான் (நுமக்கன்றி ஏனையோர்க்கு) வழங்குதலில்லா வெங்கள் தோணலத்தினையுண்டு எங்களை நீத்தல் மரபாமோ. ஆதலான் எங்களைத் துன்பத்தினின்றும் நீக்குவாயாக. எங்களை வரைந்து கோடற்குப் பொருளினைக் கொணர நின்தேரிற் பரியினங்கள் பூண்பதாக வென்றன ளென்க. (வி - ம்.) கிழங்கினை வேட்டு நாட்டும் வெற்பென்க. கிழங்குகல்ல வேண்டி வள்ளிக்கொடியினை அறுப்பரென்க. விரைவாகக் கொண்டு வருவாயாக வென்பது குறிப்பெச்சம். தேரிற் பரியினம் பூண்க என்பது கடுமொழியென்க. கிழங்கு : தலைவி. அதன் கொடி : தலைவியின் சுற்றத்தார். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (529) நலந்தொலை வுரைத்து வரைவு கடாதல் அஃதாவது கடுமொழி கூறி வரைவு கடாயதோழி எங்களில் விழை வினையுடையாய் என்று எங்களுள்ளம் பொருந்திய தல்லாது உம்மிடத்துப் பொருந்திய விழைவினை யுடையேமென்று கருதி நின்னுள்ளந் தழீஇயதில்லை. ஆகையான் தோளினையுடையாய் ! வரைந்து கொள்ளா |