பக்கம் எண் :

களவுப் படலம்1209

யாயின் இன்று எங்கள் அழகின் வளத்தினைத் தந்து செல்வாயாக வெனக் கூறாநிற்றல்.

 கெழுவிய காதலை யென்றெம துள்ளங் கெழீஇய தன்றித்
 தழுவிய காதல மென்றுநின் னுள்ளந் தழீஇயதின்றே
 எழுவியல் வான்புயத் தாய்வரை யாயெனி லின்றெமது
 வழுவிய மாமை வளந்தந்து சேறிநும் வான்பதிக்கே.

(இ - ள்.) தூணின் இலக்கணம் பொருந்திய தலைவனே ! எங்கண் மாட்டுப் பொருந்திய காதலினையுடையா யென்று எங்களுள்ளம் நின் மாட்டுப் பொருந்தியதல்லாமல் நின் மாட்டுத் தழுவுதல் செய்த ஆசையினையுடையம் என்று நின்னுள்ளமானது எங்களைத் தழுவியதில்லை. ஆதலான் இன்று (அந்தணர் சான்றோரை முன்னிட்டு) வரைந்து கொள்ளா யாயின் (உன் பிரிவான் எங்களைவிட்டு) நீங்கிய அழகின் வளத்தினைத் தந்து நின்னூர்க்குச் செல்வாயாக வென்றன ளென்க.

(வி - ம்.) மாமை - அழகு. கெழுவிய - பொருந்திய. எழு - தூண். தோழி தலைவியின் எண்ணத்தைத் தன்னெண்ணமாகக் கருதி. "கெழுவிய காதலை யென்றெமதுள்ளங் கெழீயது" என உளப்படுத்திக் கூறினள்; தானவள் என்னும் வேற்றுமையின்மையால். மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல்.

(530)

வரையுநாள் சுட்டி வரைவு கடாதல்

அஃதாவது நலந்தொலை வுரைத்து வரைவு கடாய தோழி நெடுந் தகையாய் ! மதி ஊர்கொண்டது. வேங்கை மலர்ந்து சீர்கொண்டது. வெற்பன் காதலியானவள் செல்வமுடையாள் என்னுஞ்சொல் விண்ணும் மண்ணும் நிறைந்தன. தலைவியின் பானல் போன்ற கண் நீரினைக் கொண்டது. நோய் நீங்கற்கு மருந்து கண்டதின்றெனக் கூறாநிற்றல்.

 ஊர்கொண் டதுமதி மெல்லிணர் வேங்கையொள் வீமலர்ந்து
 சீர்கொண் டதுவெற்பன் காதலி செல்வி யெனுமொழிவிண்
 பார்கொண் டனவின்னும் பைந்தொடிப் பாவைதன் பானலங்கண்
 நீர்கொண் டதுமருந் தோகண்ட தின்று நெடுந்தகையே.

(இ - ள்.) நெடிய தகுதிப்பாட்டினையுடைய தலைவனே வெண்கதிர் மண்டிலம் பரிவேடத்தினைக் கொண்டது. மெல்லிய கொத்தினை யுடைய வேங்கை மரங்கள் ஒள்ளிய மலர்கள் மலரப்பெற்றுச் சிறப்பினைக் கொண்டது. மலைநாடனாற் காதலிக்கப்பட்ட (எந்தலைவி) எல்லாச் செல்வத்தினையு முடையளாயினள் என்கின்ற மொழி விண்ணுலகத்தினும் மண்ணுலகத்தினும் நிறைந்தன. பசிய வளையினையணிந்த தலைவியின் நீலமலரினை யொத்த கண்ணின் நீர் நிறைந்தது. இந்நோய் நீங்கற்கு மருந்தினைக் கண்டதன்று. ஆகையான் விரைவின் வந்து வரைந்து செல்வாயாக வென்றன ளென்க.

(வி - ம்.) மதியூர் கோடலும் வேங்கை மலர்தலும் வேடர்கள் வரையும் நாளினை யறிவிக்கும் நல்லோரை யென்பாள். "ஊர் கொண்டது மதிமெல்லிணர் வேங்கை யொள்வீ மலர்ந்து சீர்கொண்டது" என்