| பிரிந்தமை பாங்கி திருந்திழைக் குரைத்தல் அஃதாவது ஆற்றாத் தலைவியைத் தேற்றுதலரிதாற் றாழ்க்கலன் வரைவென வலித்த தலைவன் பிரிவினைத் தோழி மயிலினை ஒத்த தலைவியே ! தேனையுண்டவர் கீழே விடுத்தலும் உண்ணலுமாகிய அப்பகுதியு ளொன்றுந் துணிவு செய்யார். மிக்க பொருடேடத் தலைவன் சென்றனன். அது நன்மையினைச் செய்யும் இப்பகுதியோ அல்லது துன்பப் பகுதியோ எண்ணுதற் கரிதெனக் கூறாநிற்றல். | | வெப்பா னளவிய தேன்வாய் மடுத்தோர் விடுத்தலுண்டல் | | | அப்பா லவற்றுளொன் றுந்துணி யாரது போன்மயிலின் | | | ஒப்பா யுறுபொருட் கேகினர் காணது வானலஞ்செய் | | | இப்பால தோவின்ன லப்பால தோவிவ ணெண்ணரிதே. |
(இ - ள்.) மயிலினையொத்த தலைவியே ! இயற்கையின் வெப்பினை யுடைய தேனினை யுண்டவர்கள் அத்தேனின் குணமறிந்து கீழ்விடுதல் உண்ணுதலாகிய அவ்விரண்டனுள் ஒன்றினையுந் துணிந்து செய்யார். அதுபோல, (நந் தலைவர்) நம்மவர் விரும்பிய மிக்க பொருடேடச் சென்றனர். அச்செலவு (நமக்கு) மேலான நன்மையைத் தருகின்ற இப்பகுதியதோ அன்றித் துன்பத்தினைத் தரும் பகுதியதோ யாம் எண்ணுத லரிதென்றன ளென்க. (வி - ம்.) நாம் பொருளை விழைந்து தலைவரை விடுத்தலுந் துன்பம். விடாது இவ் வொழுகலாற்றின் நீட்டித்து வைத்துக்கொள்ளினும் பெரிய ஏதமாம் என்பது தோன்ற "உறுபொருட் கேகினர் காணது" என்றனள். இவ் வொழுக்கத்தின் நீட்டித்து வைத்துக் கோடலான் வருந்துன்பமாவது தமர்கள் எண்ணம் பொருண்மேற் சேறலான் அவர்க்கஞ்சுமிடத்துளதாம் துன்பமென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைபொருள் மாட்சிபடுத்துப் பிரிதல். (535) பிரிவு கேட்டவள் பருவர லெய்தல் அஃதாவது பிரிவுகேட்டுப் பருவரல் எய்திய தலைவி அன்னமே ! இறைவனடியை யடையாத பகைவரைப்போலத் தலைவன் சுரத்தின்கட் சென்றானென்று சொல்வதற்கு முன்னரே என்னுயிர் அழிவதாயின் இனியான் உயிரினோடு கூடிவாழ்த லெங்ஙனமெனக் கூறாநிற்றல். | | கன்றால் விளவெறி காழ்கணை பூட்டிக் கருதலரூர் | | | வென்றான் றணிகையில் வீராட்ட காசனை மேவலர்போற் | | | சென்றா னெனுமுன்னர்த் தீவினை யேனுயிர் தேய்ந்தழிவ | | | தென்றா லினிவைகு மாறெங்ங னாவ தெனக்கனமே. |
(இ - ள்.) நடையான் அன்னத்தினை யொத்த தோழியே ! பசுங் கன்றினால் விளம்பழத்தினை யெறிந்த வயிரம் பொருந்திய வாளியைப் பூட்டிப் பகைவர் ஊரினை வென்றானாகிய தணிகைப் பதியின்கணெழுந் தருளிய வீராட்டகாச னென்னும் இறைவனை அடையாதாரைப் போல (தலைவன் பொருள் தேடச்) சென்றன னென்னும் முன்னரே தீவினையை யுடையேனாகிய என்னுயிர் தேய்ந்தழியுமாயின் இனியான் தங்குமாறு எங்ஙனமெனக் கூறாநின்றன ளென்க. |