| | தொடுக்குந் தொடலை யணிந்துபைந் தார்சுரு ளோதியின்வாய் | | | மடுக்குந் தொழிற்கு வரிவளைத் தோளிதன் வாரெறுழ்த்தோள் | | | விடுக்குந் தொறுமஞ்சு மெல்லுயிர்ப் பாவிக்கு விட்டுப்பன்னாள் | | | அடுக்குந் தொழில்வைத்த தெய்வத மோவருட் பாலதன்றே. |
(இ - ள்.) கீற்றுக்களை யுடைய வளையோடுகூடிய தோளினை யுடைய தோழியே. (தலைவர்) தொடுக்கப்பட்ட தொடலையினை (என் றோளில்)) அணிந்து சுருண்ட (எனது) கூந்தலின்கண் தாரினை யணியுந் தொழிற்காக நீண்ட வலியுள்ள தம்தோள்களை நீக்குந்தோறும் (அந்நீக்கம் பொறாது) அஞ்சா நிற்கும் மெல்லிய உயிரோடு கூடிய பாவியாகிய எனக்குப் பல நாளிடையிட்டுக் கூடுந் தொழிலினை வைத்த தெய்வம் அருளின் பகுதியையுடைய தல்லவெனக் கூறினாளென்க. (வி - ம்.) பன்னாள் இடைவிட்டு அடுக்குந் தொழிலென்க. தொடலை - ஒருவகை மாலை. வன்புறை - வற்புறுத்தல். மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : ஆற்றாமை நீங்கல். (540) ஆற்றாத் தலைவி தேற்றுமா றுரைத்தல் அஃதாவது வன்புறை எதிரழிந்து ஆற்றாதுரைத்த தலைவியை அணிகலன்களையுடைய தலைவியே ! எல்லாப் பொருளையும் வெறுத்தல் சேர்ந்த பெரியோரைச் சேர்ந்த பொருள் வெறுக்கப்படுவதென்னும் பொருளோடு கூடியிருப்பினும் அதனை நீக்காத காரணத்தான் யாமும் அவ் வெறுக்கை விழைந்தனம். பொருடேடச் சென்றார் தாம் வரையறுத்து நிறுத்திய நாட்கழித்து வாரார். பொறுத்திருத்தல் இல்லிருப்பவர்கடனாம். ஆதலான் நீ வருந்துதல் தக்கதன்றெனக் கூறாநிற்றல். | | வெறுக்கை யுடங்கிய வன்பினர் யார்க்கும் விளங்கிழையாய் | | | வெறுக்கை யெனினும்விள் ளாமைசெய் காரணத் தால்விழைந்தாம் | | | பொறுக்கை யிருப்பவர் தங்கட னாமென்று போனவர்நாள் | | | நிறுக்கை யிகந்தணை யார்தக்க தன்றிது நேரிழையே. |
(இ - ள்.) விளக்கமான அணிகலன்களை யணிந்த தலைவியே வெறுக்கை யென்னும் பெயரினோடு கூடிய செல்வம் (தம் நல்லூழான்) சேர்ந்த இறைவன்பாற் பேரன்பினையுடைய முனிவர்கள் யார்க்கும் (அப்பொருள்) வெறுக்கப்படுவதாயினும் (தம் நல்லூழான் அது) நீங்காத இன்பினைச் செய்கின்ற காரணத்தான் (தலைவர்பால் யாமும் அவ்வெறுக்கையை) விரும்பினாம். கற்பானாற்றி யிருத்தல் இல்லின்கணிருப் பவர்கட்குக் கடனாமெனச் சென்ற தலைவர் தாம் வரையறுத்து நிறுத்திய நாளினைக் கடந்து வாரார். அந்நாளிலே வருவர் ஆதலான் தலைவியே நீ வருந்தல் தக்கதன் றென்றா ளென்க. (வி - ம்.) வெறுக்கை - செல்வம். பின் வெறுக்கை வெறுக்கப்படும் பொருள். உடங்கிய - சேர்ந்த. விள்ளாமை - நீங்காமை. இனி வெறுக்கையுள் தங்கிய எனப் பிரித்துப் பொருள் மிகுதியாக வேண்டுமென்று அப்பொருளிற் றங்கிய அன்புடைய நஞ்சுற்றத்தார் யாவர்க்கும் பொருளானது வெறுக்கப்படுவதானாலும் வெறுத்தலின்மையைச் செய் |