| சொல்லிய நாளிற் புல்லுவ தின்மையிற் மெல்லியற் றலைவி யல்லன்மிக் கழிதல் அஃதாவது போற்றுவரின்னே ஆற்றெனக் கிளக்கப்பட்ட தலைவி அன்னையே எனக்கு வாடுந்தொழிலை யாக்கி நினக்கு வருவரெனப்பாடுந் தொழிலையாக்கித் தமக்கு நீட்டிப்பதே தொழிலாக்கி நம்மைக் கனவிலும் நினையாத் தலைவரைக் இக்குன்றின்கண் கூடுங்கால முளதோ வெனக் கூறாநிற்றல். | | வாடுவ தேதொழி லாக்கி யெனக்கு வருவரெனப் | | | பாடுவ தேதொழி லாக்கி நினக்குப்பைந் தோகையன்னாய் | | | நீடுவ தேதொழி லாக்கித் தமக்கு நினைகலரைக் | | | கூடுவ தேதொழி லாவது முண்டுகொல் குன்றகத்தே. |
(இ - ள்.) (தலைவர் நம்மைப் பிரிதலான் அப்பிரிவான்) எனக்கு வாட்டமுறுதலைத் தொழிலாகச் செய்து நினக்கு வருவரென்று தேற்றுதலைத் தொழிலாகச் செய்து தமக்கு (நம்மைக்கூடாது) நீட்டித்தலையே தொழிலாகச் செய்து (நம்மை) நினையாத தலைவரை இக்குன்றினிடத்துக் கூடுதலே தொழிலாவதும் உளதோ நமக்கென்றன ளென்க. (வி - ம்.) எனக்காக்கி, நினக்காக்கித் தமக்காக்கி என்க. பாடுவது - தேற்றிச்சொல்வது. தலைவரைக் கூடுந்தொழிலு முண்டோ? என்க. மெய்ப்பாடு : அச்சம்சார்ந்த மருட்கை. பயன் : ஆற்றாமை நீங்கல். (550) வரைவிடைப் பிரிவிற்கு வாடுவ தென்னென விரைகுழற் பாங்கி தணிவுறக் கிளத்தல் அஃதாவது சொல்லிய நாளின் புல்லுவதின்மையின் மெல்லியற் தலைவி யல்லன்மிக் கழிந்தாளை மேனியினையுடைய நல்லாய் நாஞ்செருக்குற்றிருப்பத் தலைவர் சுரம்போதலை யறிந்திருந்தும் மாக்கள் அலர்தூற்றத் துன்பமுறும் செயல் இவ்வரையிடத்துப் பொருந்துமா வெனக் கூறாநிற்றல். | | நறுமாந் தளிரன்ன மேனிநல் லாயவர் நாகத்துநாம் | | | இறுமாந் திருப்பதற் கேசுரம் போதலெய்த் தேயிருந்தும் | | | சிறுமாந் தர்களலர் தீட்டவல் லாக்குஞ் செயனினக்கே | | | உறுமாந் தளிமதுச் சோலையஞ் சார லுயர்வரைக்கே. |
(இ - ள்.) நல்ல மாந்தளிரினை யொத்த மேனியையுடைய தலைவியே அவர் மலையின்கண் நாம் செம்மாந்திருந்து இன்பமடைதற்கே சுரத்தின்கட் சேறலை அறிந்திருந்தும் சிறிய மாக்கள் அலர்கூற வருந்தும் அளிகள் தேனையுண்ணும் சோலைகளையுடைய சாரலினையுடைய மலையிடத்து நினக்குப் பொருந்து மென்றன ளென்க. (வி - ம்.) இறுமாப்பு - செம்மாப்பு. எய்த்தல் - அறிதல். அல்லாத்தல் - துன்புறுதல். செயல் நினக்குறுமெனக் கூட்டுக. அளி - |