பக்கம் எண் :

1222தணிகைப் புராணம்

வண்டு. சிறுமாந்தர்கள் - கீழோர். மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த பெருமிதம். பயன் : ஆற்றுவித்தல்.

(551)

வன்புறை யெதிரழிந்து துன்பொடு கிளத்தல்

அஃதாவது வரைவிடைப் பிரிவிற்கு வாடுவதென்னெனத் தணிவுறக் கிளந்த தோழிக்குத் தலைவி, ஏடி துன்பினை யுறுவாயென்று பொருளினை யொருவர் கொடுப்பின் அப்பொருள் பெற்று அதனாற் றுன்புறுவா ருண்டோ இல்லை. ஆற்றுதல் செல்லாமையான் வருந்துகின்றேன் கனாவுஞ்செறிந்த நிறையை நில்லாதழிக்கின்றது. இவ்வாறு நிகழுந் தீவினைக்கு யானென் செய்கோவெனக் கூறாநிற்றல்.

 அல்லா வெனப்பொரு ளார வொருவர்க் களித்திடினும்
 எல்லா வதுசெய் தழிவதுண் டோவென்னி னாற்றுவது
 செல்லா மையினழி கின்றேன் கனவுஞ் செறிநிறையை
 நில்லா தழிப்பதென் செய்கோவிவ் வாறு நிகழ்வினைக்கே.

(இ - ள்.) ஏடி துன்பினையடைவா யென்று ஒருவர்க்கொருவர் பொருளினை (அவா நீங்கக்) கொடுப்பினும் (அப்பொருளான்) அதனைச் செய்து வருத்த முறுவாருளரோ. அங்ஙனம் (நீ கூறும் வன்புறையை) என்னான் ஆற்றுவது செல்லாமையான் வருத்த முறுகின்றேன். கனவும் (என் மாட்டுச்) செறிந்த நிறையினை நிலைபெறாமல் அழிக்கின்றது. இங்ஙனம் நிகழ்கின்ற செயலினுக்கு யான் என் செய்வேன் என்றனளென்க.

(வி - ம்.) அல்லா - துன்பப்படுவாய். எல்லா - ஏடி; தோழி முன்னிலைப் பெயர். என்னின் - என்னால். செய்கு - செய்வேன். மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த பெருமிதம். பயன் : ஆற்றாமை நீங்கல்.

(552)

கூடுநர்ப் பெறினவர் நீடுவ தின்றெனப்
பொற்புறு தலைவியை வற்புறுத் துரைத்தல்

அஃதாவது வன்புறை எதிரழிந்து துன்பொடு கிளந்த தலைவியை நோக்கித் தோழி, ஆயக்கூட்டத்தார் செய்யும் விளையாட்டின்கட் பொருந்தாள். மந்திர மறந்து வீழ்ந்த தேவர்கள் போலக் கலக்க முறுகின்றனள் என்று தாயத்தார் அறியாவகை தலைவரை வணங்கிக் கூறும் தந்திரமுடையாரைப் பெறின் இப்பொழுதே நாமுற்ற துன்பினை நீக்கலாமெனக் கூறாநிற்றல்.

 ஆயத் தவர்புரி யோரையெய் தாண்மனு வாங்கயர்த்த
 காயத் தவரிற் கலங்குகின் றாளென்று கைதொழுது
 தாயத் தவரறி யாமையிந் நோய்தலை வர்க்குரைக்கும்
 மாயத் தவர்ப்பெறி னின்னே யிடும்பையை மண்ணுதுமே.

(இ - ள்.) ஆயக்கூட்டத்தினர் விழைந்து செய்யும் விளையாட்டிடத்தின்கட் டலைவி செல்கின்றாளில்லை. (தானாகாயத்திற் பறந்து செல்லற்குரிய) மந்திரத்தினை மறத்தலாற் (பூமியினுற்ற) தேவர்கள் போலக் கலக்கமுறுகின்றனள் என்று கையான் வணங்கி நந்தாயத்தவர்