| (யாமுற்ற) இந்நோயினைத் தலைவர்க்குச் சொல்லும் தந்திரத்தினை யுடையா ரொருவரை யாம் பெற்றால் இப்பொழுதே நாமுறுகின்ற துன்பினை நீக்கலாமென்றன ளென்க. (வி - ம்.) ஆயத்தவர் - ஆயக்கூட்டத்தார். புரி - விழைந்து. ஓரை - விளையாட்டு. மனு - மந்திரம். அயர்த்தல் - மறத்தல். காயத்தவர் - தேவர்கள். மாயம் - தந்திரம். மண்ணுதல் - கழுவுதல் ; ஈண்டு நீக்குதல். மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : ஆற்றுவித்தல். கூடுநர்ப்பெறின் - தலைவரைச் சேர்வாரை நாம்பெறினென்க. (553) நீங்கினுமவருள் நீங்கல ரிவணென அயிர்ப்புறு தலைவிக் கியற்பட மொழிதல் அஃதாவது கூடுநர்ப்பெறின் அவர் நீங்குவதின்றெனப் பொற்புறு தலைவியை வற்புறுத்திய தோழி சூரியன் மேருமலையைச் சுற்றி வருவானாயினும் அவன் ஒளியை இவ்வுலகத்தில் தங்குவித்தல்போல இறைவன் உன்னுடன் உடங்குறைவா னல்லனாயினும் சாரலினையும் பொழிலினையும் ஆக்கையினையும் தன்னுள்ளத்தின்கண்ணாக அமைப்பவ ரெனக் கூறாநிற்றல். | | செங்கதிர் மேரு வலம்புகு மாயினுந் தேம்பிலொளி | | | இங்கழன் மாட்டவிர் விப்பதன் றேயிறை யோனுடங்கு | | | தங்கல னாயினுந் தன்னுளஞ் சாரலுந் தாழ்பொழிலும் | | | அங்கலுழ் மேனிநின் னாக்கையு மாக வமைப்பவனே. |
(இ - ள்.) செவ்விய கதிரினையுடைய சூரியன் (இப்பக்கத்திலன்றி) மேருவென்னு மலையினைச்சுற்றி வருவானாயினும் குறைவின்றிய ஒளியினை இவன் அழலின்கண் அமைத்திருக்கின்றாற்போல் (நந்தலைவர்) உன்னுடனொருங்குசேரத் தங்கலனாயினும் சாரலினையும் தாழ்ந்தசோலை யினையும் அழகு விளங்குகின்ற நின்னுடலினையும் தன்னுள்ளத்தின் கண்ணாக அமைப்பவனா மென்றன ளென்க. (வி - ம்.) சூரியன்தான் இப்பக்கலிலல்லது மேருவை வலம் புகுந்து அப்பக்கல் மறைந்துவிடினும் அவன்றன்னொளியினை அழலிடத்தமைத்து விளக்குந் தொழின்மை யுளவாக்கல் போன்றென்பாள் "செங்கதிர் மேருவலம்புகு மாயினுந் தேம்பிலொளி, இங்கழன் மாட்டவிர்விப்பதன்றோ" என்றனள். சாரலும் பொழிலும்நின் மேனியும் தன்னுள்ள வடிவமாக உள்ளதென்பாள் "சாரலுந்தாழ் பொழிலும் அங்கலுழ் மேனி நின்னாக்கையு மாகவமைப்பவனே" என்றனள். தேம்பிலொளி - குறைதலில்லா ஒளி. தன்னுளமாக அமைப்பவ னெனக் கூட்டுக. கலுழ்தல் - விளங்குதல். உடங்கு - ஒருசேர. அயர்ப்பு வருவரோ வாராரோ வென்னும் ஐயம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றுவித்தல். (554) குறிப்பிற் குறிப்பு நெறிப்படத் தோற்றிக் கயற்புரை கண்ணிக் கியற்பட மொழிந்தது அஃதாவது நீங்கினுமவருள நீங்கல ரிவணென அயர்ப்புறு தலைவிக் கியற்பட மொழிந்த தோழி உங்களுள்ளக் கருத்தினை விழியே இருவீர்க்குந் |