| (வி - ம்.) தாரணி தாங்குநர் - தொழில் செய்யும் மருதநில மாக்கள். அரசனெனினுமாம். தாரணி : விகாரம். மணிநாவென மாற்றுக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றுவித்தல். (556) மற்றொரு மாதை வரையுமோ வென்ன அயிர்த்த தாய்க்கு நயப்புறக் கிளத்தல் அஃதாவது வரைந்த நாண்முன் விரைந்தன ரறிகெனத் தாழ்குழற் றலைவிக்குக் கிளந்த தோழி அன்னையே நந்தலைவியை முயங்கமுயன்ற தோள்கள் மயக்கமுற்று வேறொரு மாதரைத் தோயுமோ தோயா. நந்தலைவியின் அழகின்கண் மூழ்கியகண் மற்றவர்கள் அழகின்கண் மூழ்குங் கொல்லோவெனக் கூறாநிற்றல். | | முயங்கிய மாதை முயன்றன தோண்மும்மை வையகத்தும் | | | மயங்கியும் வேறொரு மாதினைத் தோயுங்கொல் வாட்கணன்னாய் | | | தயங்கிய மாமையுண் மூழ்கிய வன்பர் தடங்கண்மலர் | | | உயங்கியும் வேற்றவர் மாமையுண் மூழ்குங்கொ லோர்ந்திடினே. |
(இ - ள்.) வாளினையொத்த கண்ணினையுடைய அன்னையே, நந் தலைவி முயங்க முயன்றனவாகிய (தலைவன்) தோள்கள் மூவுலகத்தி னிடத்தும் மயக்கமுற்று வேறொரு பெண்ணினையும் தோயுமோ தோயா; விளக்கமுற்ற நந்தலைவியின் அழகினிடத்து மூழ்குற்ற அன்பர் பெருமை பொருந்திய கண்ணாகிய மலர்கள் வாட்டமுற்றும் வேறு மாதரின் அழகினிடத்து ஆராயின் மூழ்குமோ மூழ்கா ஆதலான் நீயையங் கொள்ளா தொழிவாயாக வென்றன ளென்க. (வி - ம்.) முயங்கிய - முயங்க. மாமை - அழகு. துறைதலைவன் வேறொரு பெண்ணை வரையானாம் என்றல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தாய்க்கறிவித்தல். (557) வாய்மை கூறி வற்புறுத்தல் அஃதாவது மற்றொருமாதை வரையுமோவென்ன அயிர்த்த தாய்க்கு நயப்புறக் கிளந்ததோழி தலைவியே தேனும் கிழங்கும் மாவும் அட்டவூனும் மிகுதியாகப்பெறுக வேலன் உடங்குறைவு கருதி வந்தனன் இனி வரைவைத் தடுக்கத் தேவர்கள் முயலினு முடியாதெனக் கூறாநிற்றல். | | தேனுங் கிழங்குந் தினைநறு மாவுநெய் தேக்கியட்ட | | | ஊனுங் கழியப் பெறுகதி லம்ம வுடங்குறைவு | | | தானுங் கருதிவந் தானயில் வேலன் றனைச்சிதைப்ப | | | வானுங் கருதினு மாவதுண் டோவினி வாணுதலே. |
(இ - ள்.) ஒளிபொருந்திய நுதலினை யுடையாளே இனிய கோற்றேனையும் கிழங்கினையும் தினைமாவினையும் நெய் நிறைத்தடுதல் செய்த ஊனினையும் தலைவன் மிகப்பெறக் கடவனாக. அங்ஙனம் பெறுதலிற் பெரிது விழைவுடையேம். உடனுறைதலைக் கருதித் தலைவனும் வந்தனன் கூரிய வேற்படையையுடைய தலைவன் வரைவினை இனிக் |