பக்கம் எண் :

1226தணிகைப் புராணம்

கெடுக்கத் தேவர்கள் கருதினராயினும் ஆவ துளதோ ஆதலான் நீயாற்று வாயாக வென்றன ளென்க.

(வி - ம்.) தில் - விழைவின்கண் வந்தது. அம்ம : அசை. தேக்கி - நிறைத்து. தனை - தலைவனை. வான் : இடவாகுபெயர். தலைவன் வந்துவிட்டனன். அவன் வரைவை இனித் தேவர்களாலும் மாற்ற இயலாது ஆதலான் அவனுக்குணவு நல்கி உடம்படுவதே தகுதியென உண்மைத் தன்மைகூறி வலியுறுத்தனள் தோழி யென்க. இதனை "வேலன்றனைச் சிதைப்ப வானுங் கருதினுமாவ துண்டோ வினிவாணுதலே" என்றனள். ஆதலான் நீயாற்றுவாயாக வென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றுவித்தல்.

(558)

கடியொடு வருதல் காணுதும் வம்மெனப்
பிடிநடைத் தலைவிக்குப் பெய்வளை கிளத்தல்

அஃதாவது வாய்மைகூறி வற்புறுத்திய தோழி தலைவியே நம்மை நீத்துச் சென்ற தலைவன் கடியோடுவருவான் காண வருவாயாக. முதுகின் கண்ணுள்ள பொருட்பாரத்தினையுடைய யானையுந் தேருங் கலந்து நல்லோரை யொப்ப அடங்கிச் சாரலின் நடுவில் வந்தனவெனக் கூறாநிற்றல்.

 நெருநற் கடிமலர்ச் சூழலி னந்துயர் நீத்துச்சென்றான்
 வருநற் கடியொடு காணவம் மோமதி வாணுதலாய்
 வெருநக் கடிப்பொருள் வேழமுந் தேரும் விரசிநல்லோர்
 பொருநக் கடிதடஞ் சாரலி னூடுமுன் போந்தனவே.

(இ - ள்.) மதியினையொத்த ஒளிபொருந்திய நுதலினையுடைய தலைவியே முதுகினிடத்து வரைதற்குரிய பொருளினையுடைய யானையும் தேருங்கலந்து (அப்பொருட் சுமையால் ஐம்பொறியடங்கி யமைதி பெற்ற) உண்மை ஞானிகளையொப்ப வாசனையை யுடைய மலைப்பக்கத்துப் போந்தனவாதலின் நென்னல் வாசனையோடுகூடிய மலரினையுடைய சூழற்கண் நம்மை நீத்துச்சென்ற தலைவர் வரைவோடு வருகின்றதனைக் காண்டற்கு நீயும் வருவாயாக வென்றன ளென்க.

(வி - ம்.) வெரிந் - முதுகு. கடி - வரைவு. பொருள் - வரைவுக்குரிய பொருள். விரசி - கலந்து. ஐம்பொறி யடங்கி யமைதியுற்ற சான்றவர் செயல்போல யானையுந்தேரும் பொருட்பாரத்தான் அமைதியுற்று வருகின்றன என்பாள். "நல்லோர் பொருநக் கடிதடஞ் சாரலினூடுமுன் போந்தன" வென்றனள். பொருந - ஒப்ப. பொருட் பாரத்தால் விரையாது சான்றோரையொப்ப அடங்கி வந்தவென்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைவிக்கு வரைவறி வுறுத்தல்.

(559)

பொருளிறை விடுத்தமை தெரியிழைக் குணர்த்தல்
(தோழி கூற்று)

 ஊருட்டித் திசைதிசை யோராழி வையம் புரப்பவர்நின்
 பொருட்டித் திருவரை வாழ்நரெல் லாமகிழ் பூப்பமின்னே