பக்கம் எண் :

களவுப் படலம்1227

சிருட்டித் துறுத்தின ரோவறி யேஞ்செம்பொன் மேருகிரி
மருட்டித் தயங்கிய மாசறு செம்பொன் மலையிதுவே.

(இ - ள்.) மின்னல் போன்றவளே! திசைதோறும் திசைதோறும் ஒற்றையாகிய ஆணைச்சக்கரத்தை யுருட்டி உலகத்தைப் பாதுகாக்கும் நந்தலைவர் நின்பொருட்டு இவ்வழகிய மலையில் வாழும் நமரெல்லாம் மனமகிழ வேண்டிச் செம்பொன்னாகிய மேருமலையோ வென்று மருள்தற்குக் காரணமான விளக்கமுடைய குற்றமற்ற இச்செவ்விய பொன் மலையினைப் படைத்து விடுத்தனரோ யாம் அறிகிலேம்.

(வி - ம்.) ஓராழியுருட்டி என ஒட்டுக. தயங்கிய - விளங்கிய மாசறு செம்பொன்மலை யென்றது பொற்குவியலை.

(560)

குன்றவரறிவு நன்றியி னின்றென
நகுமுகத் திறைவிக் கிகுளை கிளத்தல்
இதுவுமது

 காட்டத் தளவைக் கியையக் கனலி கதிப்பதுபோல்
 ஈட்டத் தளவைக் கியைய வவாமிக் கெழுவதன்றே
 வாட்டத் தளவைக் கியையு மருந்திலர் வஞ்சியன்னாய்
 கூட்டத் தளவைக் கியைவது பொன்னெனுங் குன்றவரே.

(இ - ள்.) வஞ்சிக்கொடியை ஒத்த நங்கையே! காதலர் கூடும் தகுதிக்கு அளவையாகவமைவது பொருள் ஒன்றே என்று கருதும் நம் குன்றவாணர் நமது வாட்டத்தை அகற்றுமளவிற்கு வேண்டிய மருந்து தம்பாலிலராவர்; எற்றாலெனின் விறகின் அளவிற்கேற்ப நெருப்பானது மிக்கெழுவது போன்று, பொருளின் மிகுதிக்கேற்பவே அவாவும் மிக்கெழுவதொன் றன்றோ!

(வி - ம்.) பொருளைப் பெரிதாக மதிப்பவர்க்கு எத்துணைப் பொருள் கொடுப்பினும் அமைதி யுண்டாதலில்லை. அதனையே காதலர் தகுதிக்கு அளவையாகக் கொள்ளுமியல்புடைய நம்மனோர். நம் நோய்க்கு மருந்தாகிய அருளை உடையர் அல்லர் என்பதாம். காட்டம் - விறகு. ஈட்டம் - பொருள்.

(561)

விலையிடன் மாதர் முலைதனக் கின்மையி
னில்லவர் விழைவுக் கெல்லையின் றென்றல்
(தோழி தலைவனுக் குணர்த்தல்)

 அண்டத் திடைவெளி யின்றிச் செழும்பொ னடைச்சியிது
 கொண்டத் திருவைக் கொடுக்கவென் றாலுங் குறையுளதே
 மண்டத் திசைதொறும் வண்புக ழீட்டும் வரதவிருட்
 கண்டத் தவரைக் கருதா தவரினங் கானவர்க்கே.

(இ - ள்.) செல்லுந் திசைதொறும் வளவிய புகழையே திரட்டா நின்ற வரதனே! இருண்டமிடற்றினையுடைய சிவபெருமானைக் கருதாதவர்க்கு