| அளித்தொடை மார்பற்கு வெளிப்படக் கிளத்தல் இதுவுமது | | முறுவலுங் காதன் மொழியுங் கிளரமுன் வந்திடரின் | | | கறுவலுங் காவலர் தம்பணி யேற்றுக் கடனறிந்து | | | நிறுவலுங் காணுநிற் காண்க விரைய வெனநிகழ்த்தி | | | மறுவலுங் காதலி புல்லிக்கொண் டாளென்னை மன்னவனே. |
(இ - ள்.) பெருமானே! புன்சிரிப்பும் அன்புமொழியும் மிகா நிற்ப எதிரே வந்தணுகி நமது துன்பத்தின் கொடுமையையும், உலகத்தைப் பாதுகாக்கின்ற தமது கடமை இஃதென்றுணர்ந்து அக்கடமையைச் செய்து (துன்பமகற்றி) நிலைநிறுத்துதலும் ஆகிய இவற்றை நன்குணரும் நின்னை விரைந்து சென்று காண்பாயாக என்று கூறி மீண்டும் வந்து தலைவி என்னைத் தழுவிக்கொண்டனள். (வி - ம்.) முறுவல் - புன்சிரிப்பு. இடர் - பிரிவாற்றாமை. கறுவல். சினத்தல் ; ஈண்டுக் கொடுமை மேனின்றது. விரைய : ஏவல். மறுவலும் - மீண்டும். (565) கல்லதர்க் கானஞ் செல்லரி தென்றல் (தலைவன் கூற்று) | | கனிச்சந் தனமுங் கமழ்பூஞ் சுனையுங் கஞலும்வெற்பின் | | | பனிச்சந் திரமுகத் தாய்பசு நீழல் பயின்றிருப்பாட் | | | கினிச்சந்த வாரழன் மேயும்வெங் கானத் தியவையென்னோ | | | டனிச்சந் தனையஞ்சுஞ் சீறடி பாவ லருங்குரைத்தே. |
(இ - ள்.) கனியையுடைய சந்தனமரமும் நறுமணங்கமழா நின்ற பூவையுடைய சுனைகளும் செறியும் மலைக்கண் வாழும் திங்கள்போன்ற குளிர்ந்த முகத்தினையுடையோய்! நாடோறும் பசிய நீழலிலே பயின்று பழகியிருக்கின்ற தலைவிக்கு இனி ஒளியுடைய நெடிய காட்டுத்தீ மண்டியெரியும் வெவ்விய பாலைக்காட்டு வழி என்னாம்? அனிச்சமலர்க்கும் அஞ்சும் மென்மையுடைய அவளது சிற்றடி அவ்வழியிற் படுதல் அரிதேயாம். (வி - ம்.) சந்தனம் - சந்தனமரம். கஞலுதல் - செறிதல். பனி - குளிர். சந்தம் - ஒலி. வார் - நெடிய. அருங்குரைத்து - இயலாதது. (566) கான்றழலாமைக்குக் காரணங் கிளந்திட் டூன்றிகழ் வேலனை யுடன்படு வித்தல் (தோழி கூற்று) | | சீதப் புனலும்வெண் டிங்களுந் தென்றலுந் தீயினுநீ | | | போதப் புலம்பிய ஞான்றடு மேலுடன் போக்கின்மன்னா | | | ஏதப் பரலடுத் தோங்கத ரத்தமு மீர்ந்தடமென் | | | றோதப் படுவதன் றோமெய்ம்மை யாகநம் மொண்டொடிக்கே. |
|