| (இ - ள்.) பெருமானே! நம் ஒள்ளிய வளையணிந்த தலைவிக்கு, நீ அகன்று போதலானே பிரிவெய்தியிருக்குங் காலத்தே குளிர்ந்த நீரும் வெள்ளிய திங்களும் தென்றலுமாகிய இவைகளும் தீயினுங்காட்டிற் பெரிதும் சுடுமாயின், அத்தகையோட்கு நின்னோடு கூடிச்செல்லும் செலவின்கண், துன்புறுத்தும் பருக்கைக் கற்கள் மிக்கு நெடிதாகியபாலை நிலவழியும் குளிர்ந்த நீர்நிலை யென்று கூறும்படி உண்மையிலேயே குளிருடையதென்று கூறலாமன்றோ. (வி - ம்.) சீதம் - குளிர். புலம்பிய - தனித்திருந்த. ஏதம் - துன்பம். ஒண்டொடி : அன்மொழித்தொகை. தலைவி. (567) பின்னென நினையலை யின்னினி நடவென வணிதிகழ் வேலற்குத் துணிவுறக் கிளத்தல் (தோழி கூற்று) | | அருக்கனு மாரழற் றேவனு நின்னயில் வேனினையில் | | | பொருக்கென வாடுவர் போலு மவர்பொங்கு கானகநீ | | | உருக்கிளர் மாதொடுஞ் சென்றாற் றணிந்தொழி யாமையுண்டோ | | | வெருக்கொள வேதின்மை கூறுவ தென்னோ விளம்பையனே. |
(இ - ள்.) ஐயனே! ஞாயிற்றுக் கடவுளும் நெருப்புக் கடவுளும் நினது கூரிய வேற்படையை (மறப்பரோ நினைவர் அல்லரோ) நினைப்பாராயின் அதற்கு அஞ்சி ஞெரேலென நெஞ்சம் வாடுவரல்லரோ அவர் மிக்கு ஆட்சி செய்யும் அப்பாலைக் கானம் நீ நினது அழகு மிக்க தலைவியோடு சென்றக்கால் தனது வெப்பந்தணியப் பெற்றுத் தண்ணென்றிராதோ நீயே கூறுதி. (வி - ம்.) அருக்கன் - ஞாயிறு. அழல் - நெருப்பு. அயில் - கூர்மை. பொருக்கென : விரைவுக் குறிப்பு. உரு - அழகு. ஏதின்மை - அயலாந் தன்மையுடைய சொல். (568) தேக்கமிழ் துரையவள் போக்குத் துணியக் கற்பிது வென்ன வற்புறக் கிளத்தல் (தோழி தலைவிக்குக் கூறியது) | | பூணினை யோம்புந ரில்லை யுடல்கெடிற் போர்ச்சிலையின் | | | ஏணினை யோம்புந ரில்லை புகழ்கெடி னீர்ங்குழன்மெய்ம் | | | மாணினை யோம்புந ரில்லைபொல் லாங்கு வரினுரிய | | | நாணினை யோம்புந ரில்லைகற் போடி நலிவுறினே. |
(இ - ள்.) பெருமாட்டீ! இவ்வுலகின்கண் தம்முடம்பு கெட்டால் அணிகலன்களைப் பாதுகாப்பவர் யாருமில்லை. மறப்புகழ் கெட்ட விடத்தே போர்க்கருவியாகிய வில்லினது வலிமையைப் பாதுகாப்பவர் யாருமில்லை. பொல்லாங்கு நேர்ந்துழி உடலின் மாண்பினைப் பேணுபவரும் இல்லை. பெண்மைக்கே யுரிய நாணத்தினைக் கற்பினுக்கிழுக்கு நேருமிடத்தே பேணுபவரும் இல்லை என்றுணர்வாய். |