பக்கம் எண் :

களவுப் படலம்1231

(வி - ம்.) பூண் - அணிகலன். ஏண் - மாண்பு; வலிமை. ஈர்ங் குழல் : அன்மொழித்தொகை. பொல்லாங்கு - மானக்கேடு.

(569)

போக்குத் துணிந்தனர் பூங்கழற் காலரென்
றேக்குலக் கண்ணிக் கினிதெடுத் தியம்பல்
(தோழி தலைவிக்குக் கூறியது)

 நீக்கங் கருதின ரிவ்வரைச் சூழனின் மாமையெழிற்
 காக்கங் கருதின ராயத் தவரன்னை மார்க்குநனி
 ஏக்கங் கருதின ரீர்ங்குழ லாயென் னையர்திணிதோட்
 கூக்கங் கருதின ரூக்கத்து ளூக்கங்கொ ளுத்தமரே.

(இ - ள்.) ஈரிய கூந்தலையுடையோய்! மனக்கிளர்ச்சியுள்ளும் பெரிதும் ஊக்கமுடையராகிய நம்பெருமான் நந்தமையன்மார் திணிந்த தோள்கட்குக் கிளர்ச்சியுண்டாக்கவும், நமது ஆயமகளிர்க்கும் அன்னைமார்க்கும் மிக ஏக்கத்தையுண்டாக்கவும், நினது மாமையுடைய அழகுக்கு ஆக்கஞ் செய்யவும் கருதா நின்றனர் (அஃதாவது) இம்மலைச் சாரலினின்று நின்னை உடன்கொண்டு நீங்கிப்போதலைக் கருதுகின்றனர்.

(வி - ம்.) உடன் போக்கு நிகழ்ந்துழி இச்செயலனைத்தும் நிகழ்தலின் இங்ஙனம் கூறினள். மாமை - நிறம். ஆயத்தவர் - தோழியர். என்னையர் என்றது தமையன்மாரை.

(570)

செல்லுறு மேதுச் சொல்லெனக் கவறல்
(தலைவி கூற்று)

 ஏற்றுக் கொடியனை வீராட்ட காசத் திறையையெண்ணார்
 கூற்றுக் கிரையெனக் காலரி னேகுங் கொடுநெறிநேர்
 ஆற்றுக் கடுஞ்சுரஞ் செல்வதற் கேதுவென் னாரணங்கே
 பாற்றுக் கிளைபட ருங்கதிர் வேல்கொண்ட பார்த்திபனே.

(இ - ள்.) தெய்வப் பெண்போல்வாய்! கழுகினம் பின்தொடர்தற்குக் காரணமான ஒளியுடைய வேற்படையினை ஏந்திய நந்தலைவன் விடைக்கொடி யுயர்த்திய வீராட்டகாசத் திறைவனை நினையாத மடவோர் மறலிக்கிரையாக அவன் தூதர் பின்னே செல்லுங் கொடிய வழியை யொத்த கொடிய பாலைநிலத்து வழியில் போதற்குக் காரணம் என்கொல் கூறுதி.

(வி - ம்.) ஏறு - விடை. காலர் - கூற்றன் தூதர். பாறு - கழுகு. பார்த்திபன் - அரசன் ; தலைவன்.

(571)

ஏது விதுவென மாதர்க் கியம்பல்
(தோழி கூற்று)

 மறையினை நாட்டியு மேதத்தி னீக்கியு மன்றல்புரி
 முறையினை நாட்டின மன்றே முலைவிலை முற்றுலகும்